பெங்களூரில் மனைவி மீது சேற்று நீர் பட்டதற்காக வந்த கோபம்.. யார் அந்த 'முரட்டு கை கடி' கணவர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் ஷோத்திரபுரத்தில் ஓட்டலில் மனைவியுடன் சாப்பிட சென்றுள்ளார் தனியார் நிறுவன ஊழியர் ஜெயந்த். அவரது காரால், மழை நீர் இன்னொரு காரில் சென்றவரின் மனைவி மீது விழுந்தது. இதனால் கோபம் அடைந்த பெண்ணின் கணவர், தனியார் நிறுவன ஊழியரின் விரலை கடித்து விட்டார். இதனால் சிகிச்சைக்காக ரூ.2 லட்சத்தை அந்த ஊழியர் செலவு செய்திருக்கிறார். அந்த 'முரட்டு கை கடி' கோபக்காரரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

பெங்களூர் நகரில் வசித்து வரும் ஜெயந்த் என்பவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 25-ந்தேதி சேஷாத்திரிபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்று தனது மனைவியுடன் சாப்பிட்டு விட்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். ஜெயந்த் தனது மனைவியுடன் சென்ற கார், ஓகலிபுரம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே உள்ள சாலையில் சென்றது.

Husband gets angry after wife gets muddy in Bangalore Spends Rs 2 lakh to save hand

இந்நிலையில் தொடர் மழையால் பெங்களூர் ஓகலிபுரம் மேம்பால சுரங்கபாதை மழைநீர் தேங்கி நின்றிருந்தது. அப்போது ஜெயந்த் கார் வேகமாக சென்றது. சேறும், சகதியுமான மழைநீர் தெறித்து, அந்த வழியாக சென்ற மற்றொரு காரின் மீது பட்டது. அந்த காரில் இருந்த பெண் ஜன்னல் கண்ணாடியை திறந்து வைத்திருந்தார். அவர் மீதும் விழுந்தது. இதனால் ஜெயந்தை அந்த பெண்ணின் கணவர் தகாத வார்த்தையில் திட்டியிருக்கிறார். அப்போது காரின் கண்ணாடியை மூடியிருந்தால் இவ்வாறு நடந்திருக்காது என கூறிவிட்டு ஜெயந்த் காரில் புறப்பட்டு சென்று விட்டார்.

ஆனால் ஜெயந்த் காரை விடாமல் துரத்தி வந்துள்ளார் அந்த நபர். சிறிது தூரத்தில் மடக்கி பிடித்தார். காரில் இருந்து இறங்கிய நபர், தனது மனைவியை பார்த்து திட்டியது ஏன்? என்று கேட்டு ஜெயந்தை அந்த நபர் தாக்கினார். அத்துடன் அவரது வலது கையில் மோதிர விரலை பிடித்து அந்த நபர் பலமாக கடித்தார். இதனால் ஜெயந்த் விரல் துண்டாகும் அளவுக்கு போனது.

நரம்புகள் உடைந்ததுடன் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதற்காக தனியார் மருத்துவமனையில் ஜெயந்த் சிச்சை பெற்றார். ஜெயந்திற்கு கை விரலில் ஏற்பட்ட காயத்திற்காக தையல் போட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதற்காக ரூ.2 லட்சம் வரை அவருக்கு சிகிச்சை செலவானது. மனம் நொந்து போயிருக்கும் ஜெயந்த். மாகடி ரோடு போலீஸ் நிலையத்தில் அந்த நபர் மீது புகார் அளித்தார். அந்த குறிப்பிட்ட காரின் வாகன பதிவெண்ணையும் ஜெயந்த் வழங்கினார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முரட்டு கை கடி நபரை தேடிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+