கழுத்து வரை போன தாலி.. கடைசி நேரத்தில் கட்ட மறுத்த மாப்பிள்ளை.. பெங்களூரில் பரபரப்பு! என்ன நடந்தது
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தேவனஹள்ளி அருகே சில நாட்களுக்கு முன்பு நடக்க இருந்த திருமணம் கடைசி நேரத்தில் நின்றுவிட்டது. தாலியை வாங்கி கட்ட போன மாப்பிள்ளை திடீரெனக் கல்யாணத்தை நிறுத்திவிட்டுக் கிளம்பிவிட்டாராம். அங்கு என்ன நடந்தது.. கல்யாணம் கடைசி நேரத்தில் நிற்க என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பெங்களூர் தேவனஹள்ளி அடுத்துள்ள பாலேபுரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி சில நாட்களுக்கு முன்பு திருமணம் கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்கு ஒரு நாள் முன்னதாக திருமண வரவேற்பும் பிரம்மாண்டமாக நடந்தது.

சிரித்துச் சிரித்து பேசிய மணமகன்
அப்போது கூட மணமக்கள் இருவரும் சிரித்துச் சிரித்து சந்தோஷமாகவே பேசிக் கொண்டு இருந்துள்ளனர். இதனால் திருணம் நல்லபடியாகவே நடக்கும் என அனைவரும் நினைத்திருந்தனர்.
மறுநாள் காலை திருமணத்திற்கு எல்லாம் ரெடியாகினர். ஐயர் வந்து மாலையை எடுத்துக் கொடுத்து மந்திரங்களை எல்லாம் ஓத ஆரம்பித்துவிட்டார். அங்கு அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். மண்டபம் முழுக்க இருந்தவர்கள் மணமக்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அப்போது தான் மாப்பிள்ளை ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.
கழுத்து வரை போன தாலி
ஐயரிடம் இருந்து தாலியை வாங்கிய அவர், மணமகளின் கழுத்து வரை கொண்டு சென்றார். பிறகு சட்டென ஒரு நொடி நிறுத்திய அவர் தாலி கட்ட மறுத்துவிட்டார். எனக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டமில்லை.. பெண் மீது எனக்குச் சந்தேகம் உள்ளது எனச் சொல்லிவிட்டு மளமளவென கிளம்பிவிட்டார். இது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உண்மையை உடைத்த காதலி
அந்தப் பெண்ணை பார்த்த பிறகு, நிச்சயதார்த்தத்திற்கு முன்பு இருவரும் அவ்வப்போது பேசி வந்துள்ளனர். அப்போது தனது வருங்காலக் கணவரிடம் எதையும் மறைக்கக்கூடாது என்பதால் முன்பு ஓர் இளைஞரைக் காதலித்த கதை அதன் பின் பிரேக்-அப் கதை என அனைத்தையும் சொல்லி இருக்கிறார். அப்போது அதைக் கேட்ட மாப்பிள்ளை, பழைய காதல் முடிந்த அத்தியாயம் இனி அதைப் பற்றி எல்லாம் யோசிக்காதே என வசனம் எல்லாம் பேசியிருக்கிறார்.
மேலும், திருமணத்திற்கும் ஓகே சொல்லியுள்ளார். அதன் பிறகே நிச்சயதார்த்தம் நடந்து, திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரவேற்பின் போது கூட மகிழ்ச்சியுடனேயே மாப்பிள்ளை இருந்துள்ளார். ஆனால், ஓவர் நைட்டில் என்ன ஆனதோ தெரியவில்லை.. காலை எழுந்தவுடன் கழுத்து வரை தாலியை எடுத்துச் சென்ற அவர் திருமணம் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்.
அதிர்ச்சி
இது மணமகள் வீட்டாருக்கு மட்டுமின்றி மாப்பிள்ளை வீட்டாருக்குமே பெரிய அதிர்ச்சியாகவே இருந்துள்ளது. அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். இருப்பினும், அவர்களிடம் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். இதனால் அங்குத் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எல்லாவற்றுக்கும் ஓகே சொல்லிவிட்டு கடைசி நேரத்தில், திருமணம் செய்ய மாட்டேன் என்றால் என்ன செய்வது என அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications