2 வீல் இருந்தால் தானே டிராபிக்.. இதுக்கு "ஒரே வீல்" தான்.. பெங்களூர் இளைஞரின் புதிய ஐடியா.. வினோதம்!
பெங்ளூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடக்கும் சில விஷயங்கள் நம்மை வாயைப் பிளக்கச் செய்துவிடும். இப்படி கூட யோசிப்பார்களா என நாம் யோசிக்கும் விஷயங்களைக் கூட அசால்டாக செய்துவிடுவார்கள். பெங்களூரில் இதுபோல நடக்கும் வினோதங்கள் குறித்தே தனி சமூக வலைத்தளங்களே கூட உள்ளன. அப்படி அங்குள்ள டிராபிக்கிற்கு தீர்வு காணும் வகையில் இளைஞர் செய்த செயல் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவின் டெக் தலைநகர் என்று யோசிக்காமல் பெங்களூரைச் சொல்லலாம். டெக் நிறுவனங்கள் மட்டுமின்றி இப்போது ஏகப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கூட பெங்களூரில் தான் தோன்றி வருகிறது.

இதனால் பலதரப்பட்ட மக்களும் பெங்களூரில் வசிக்கிறார்கள். அப்படிப்பட்ட பெங்களூர் நகரில் எப்போதும் பல வினோதமான சம்பவங்களும் கூட நடக்கும். அவை டிரெண்டும் ஆகும். மீண்டும் அப்படியொரு வினோதமான சம்பவம் தான் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூர் டிராபிக்
மற்ற நகரங்களில் எல்லாம் ரிங் ரோடு என்பது டிராபிக்கை குறைக்கவே இருக்கும். பொதுவாக ரிங் ரோடுகளில் சரக்கு வாகனங்கள் அதிகம் பயணிக்கும் மற்ற வாகனங்கள் குறைவாகவே இருக்கும். இதனால் அங்கு டிராபிக்கும் குறைவாகவே இருக்கும். ஆனால், பெங்களூரில் அப்படி இல்லை. அவுட்டர் ரிங் ரோட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் டிராபிக் அதிகமாகவே இருக்கும். அங்குள்ள ஐடி நிறுவனங்களே இதற்குக் காரணமாகும்.
யூனிசைக்கிள் பயணம்
அப்படி டிராபிக் அதிகமாக உள்ள பெங்களூர் அவுட்டர் ரிங் ரோட்டில் இளைஞர் ஒருவர் யூனிசைக்கிள் ஓட்டும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஹெல்மெட் மற்றும் தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்துள்ள அவர், பேக்கை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்.. பார்க்க ஏதோ ஆபீஸ் செல்வது போலவே இருக்கிறது. பெங்களூர் டிராபிக்கை சமாளித்து ஆபீஸ் போக இதுவே சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்றே கருதி அவர் இந்த முடிவை எடுத்துவிட்டதாகவே தெரிகிறது.
அதென்ன யூனிசைக்கிள்
யூனிசைக்கிள் என்றால் என்ன என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். வழக்கமான சைக்கிள் அல்லது பைக்குகளில் இரண்டு வீல்கள் இருக்கும். ஆனால், இந்த யூனிசைக்கிளில் ஒரே ஒரு வீல் மட்டுமே இருக்கும். இருப்பினும், பேலன்ஸ் செய்யத் தேவையான எலக்ட்ரானிக் சாதனங்கள் எல்லாம் உள்ளேயே இருக்கும். இதனால் அதை பேலன்ஸ் செய்து ஓட்டுவது சற்று ஈஸி தான். அவர் யூனிசைக்கிள் ஓட்டும் இந்த வீடியோ தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதற்குக் கீழ் கமெண்ட் செய்யும் பலரும் கூட பெங்களூரின் மோசமான டிராபிக் பிரச்சினைகளுக்கு இதுபோன்ற யூனிசைக்கிள் தான் தீர்வாக இருக்கும் எனப் பதிவிட்டு வருகிறார்கள். பெங்களூரில் இருக்கும் டிராபிக்கிற்கு பைக்கில் போவதே சிரமம் தான்.. இந்த யைனிசைக்கில் இருந்தால் எந்தவொரு டிராபிக்காக இருந்தாலும் உள்ளே புகுந்து போய்விடலாம் அவரை மிகவும் புத்திசாலித்தனமான நபர் தான் எனப் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் இது முற்றிலும் முட்டாள்தனம் என்றும் விபத்து ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் என்றும் கூறி வருகிறார்கள்.
ஸ்கூட்டர் லேப்டாப்
அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு வீடியோவும் சமூக வலைத்தளத்தில் பரவியது. அதில் இளைஞர் ஒருவர் தனது ஸ்கூட்டரை ஓட்டி செல்லும் நிலையில் மடியில் லேப்டாப்பை வைத்துக்கொண்டார். விஷயம் என்னவென்றால் அவர் ஆன்லைனில் மீட்டிங்கில் இருந்தார். மீட்டிங்கில் பங்கேற்றவாரே அவர் இதுபோல ஸ்கூட்டர் ஓட்டி இருக்கிறார். இதுபோன்ற பல வினோதங்கள் நடக்கும் நகரமாகவே பெங்களூர் மாறி வருகிறது.
ஸ்கூட்டரில் இதுபோல பயணித்தது தவறு தான். அதேநேரம் யூனிசைக்கிள் என்பது புதுவித ஐடியாவாக உள்ளது. நீங்கள் சொல்லுங்க யூனிசைக்கிள் ஐடியா எப்படி இருக்கு?












Click it and Unblock the Notifications