காலை 10 மணி முதல் 4 மணி வரை மின்தடை.. பெங்களூரில் இன்று முதல் 4 நாள் ‛பவர்கட்’.. உங்க ஏரியா இருக்கா?
பெங்களூர்: பெங்களூரில் பராமரிப்பு பணி மற்றும் மின்வாரிய நிலுவை பணி காரணமாக இன்று முதல் ஜுன் 12ம் தேதி வரை 4 நாட்கள் பல்வேறு இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளதாக பெஸ்காம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் ‛பெஸ்காம்’ மின்வாரியம் சார்பில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பெஸ்காம் சார்பில் பராமரிப்பு மற்றும் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கான வேலைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளை பெஸ்காம் மின்வாரியம் மற்றும் கர்நாடகா மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து மேற்கொள்ள உள்ளது. இந்த பணியின் காரணமாக இன்று முதல் ஜுன் 12ம் தேதி பெங்களூர் நகரின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதன் விபரம் வருமாறு:
இந்நிலையில் தான் பெங்களூரில் இன்று முதல் ஜுன் 12ம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு இடங்களின் மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட இந்த நாட்களில் பொதுமக்கள் மின்சாதனங்களை முன்கூட்டியே பயன்படுத்தி பணிகளை முடித்திட வேண்டும்.
அதன்படி இன்று (ஜுன் 9) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெங்களூர் எடியூர், தொட்டமதுர், மனவல்லி, காஞ்சேனஹள்ளி, நாகசந்திரா, சிடி பாளையா, திப்பூர், ஹோமாவதி, சிக்கமதுர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை (ஜுன் 10) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சி குப்பே, தாவரகெரே, ஹக்கி மரிபாளையா, ஹங்கிரஹள்ளி, எம்எச் பாளையா, டி பொம்மனஹள்ளி, நீலசந்திரா, பேடரஹள்ளி பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னையவே தோற்கடிச்சிட்டீங்கல்ல.. இனி சும்மா விடமாட்டேன்.. தம்பி தோல்வியால் டிகே சிவக்குமார் சபதம்
மேலும் ஜுன் 11ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆடுகோடி, சாலபுரியா டவர், சிக்க ஆடுகோடு, நஞ்சப்பா லே-அவுட், சிக்க லட்சுமய்யா லே-அவுட், வில்சன் கார்டன், லக்கசந்திரா, லால்ஜி நகர் பகுதியில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
அதன்பிறகு ஜுன் 12ம்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஸ்ரீநகர்,ஹொசகெரேஹள்ளி, வீரபத்ரநகர், நியூ டிம்பர்யார்டு லே-அவுட், தியாகராஜநகர், பிஎஸ்கே III ஸ்டேஜ், கத்ரிகுப்பே, கிரிநகர் 4th பேஸ், வில்சன் கார்டன், ஜேசி ரோடு, சாந்திநகர், ரிச்மண்ட் ரோடு, ரெசிடென்சி ரோடு, லால்பாக் ரோடு, சம்பங்கிராம் நகர், கேஎச் ரோடு, சுப்பையா சர்க்கிள், சுதாமநகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்ட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications