என்னையவே தோற்கடிச்சிட்டீங்கல்ல.. இனி சும்மா விடமாட்டேன்.. தம்பி தோல்வியால் டிகே சிவக்குமார் சபதம்
பெங்களூர்: பெங்களூர் புறநகர் லோக்சபா தொகுதியில் டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேசை பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி வைத்து தோற்கடித்துள்ளது. இந்நிலையில் தான் ‛‛பெங்களூர் புறநகரின் என் தம்பியின் தோல்வி என்பது எனக்கான தோல்வியாகும். இனி நான் சும்மா இருக்கமாட்டேன்'' என டிகே சிவக்குமார் சபதமேற்றுள்ளார்.
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார். இவர் கர்நாடகா துணை முதல்வராகவும் உள்ளார். இவரது தம்பி டிகே சுரேஷ் பெங்களூர் புறநகர் லோக்சபா தொகுதியில் 2012 இடைத்தேர்தல், 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு எம்பியானார்.

குறிப்பாக கடந்த முறை கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 27 இடங்களில் காங்கிரஸ் தோற்றது. ஆனால் பெங்களூர் புறநகரில் மட்டும் டிகே சுரேஷ் வெற்றி பெற்றார். ஏனென்றால் பெங்களூர் புறநகர் என்பது டிகே சிவக்குமார் மற்றும் டிகே சுரேஷின் கோட்டையாகும்.
இவர்கள் 2 பேரும் ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அண்டை மாவட்டமான பெங்களூர் புறநகரிலும் செல்வாக்குடன் உள்ளனர். அதேபோல் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் இளைய மகனான முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் ராமநகர் மற்றும் பெங்களூர் புறநகரிலும் செல்வாக்கு உள்ளது. இதனால் இவர்கள் 2 பேருக்கும் இடையே ஒவ்வொரு தேர்தலிலும் தங்களின் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதில் கடும் போட்டி இருக்கும்.
இந்நிலையில் தான் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பெங்களூர் புறநகரில் போட்டியிட்ட டிகே சுரேஷ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவர் பாஜக + ஜேடிஎஸ் கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்ட டாக்டர் மஞ்சுநாத்திடம் தோல்வியடைந்தார். மஞ்சுநாத் முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடாவின் (முன்னாள் முதல்வர் குமாரசாமியின் தந்தை) மருமகன் ஆவார்.
கடந்த 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சிவக்குமார் தம்பியான காங்கிரஸ் வேட்பாளர் டிகே சுரேஷ் தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் மஞ்சுநாத் மொத்தம் 10 லட்சத்து 75 ஆயிரத்து 553 வாக்குகளை பெற்றிருந்தார்.காங்கிரஸ் கட்சியின் டிகே சுரேஷ் மொத்தம் 8 லட்சத்து 7 ஆயிரத்த 459 ஓட்டுகளை பெற்றார். இதனால் டிகே சுரேசை 2 லட்சத்து 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் மஞ்சுநாத் வீழ்த்தினார்.
இது டிகே சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால் பாஜகவில் அமித்ஷா எப்படி அரசியல் சாணக்கியராக வலம் வருகிறாரோ, அப்படி காங்கிரஸ் கட்சியில் அறியப்பட்டவர் தான் டிகே சிவக்குமார். ஆனால் டிகே சிவக்குமாரின் தம்பியே சொந்த தொகுதியான பெங்களூர் புறநகரில் தோற்று இருப்பது காங்கிரஸ் மேலிடத்தாலேயே நம்ப முடியவில்லை.
இந்நிலையில் தான் பெங்களூர் புறநகர் தொகுதியில் தம்பி டிகே சுரேஷ் தோற்ற நிலையில் அவரது அண்ணன் டிகே சிவக்குமார் சபதமேற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பெங்களூர் புறநகர் தொகுதியில் காங்கிரஸ் (சொந்த தம்பி டிகே சுரேஷ்) தோல்வி என்பது எனக்கான தோல்வியாகும். நான் கர்நாடகா காங்கிரஸ் தலைவராக பெங்களூர் புறநகரை விட்டு வெளியே பிற தொகுதிகளில் பிரசாரம் செய்தேன். இதனால் நிறைய நேரங்கள் வீணானது.
பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சியின் ஓட்டு ஒன்றாகி அவர்களுக்கு (என்டிஏ கூட்டணி) கிடைக்கும் என்பதை நாங்கள் நன்றாக அறிந்து வைத்திருந்தோம். அதோடு ஜேடிஎஸ் கட்சியின் இஸ்லாமியர்கள் ஓட்டு மட்டும் இந்த கூட்டணிக்கு கிடைக்காது என்பதும் தெரிந்து வைத்திருந்தோம். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை'' என்றார்.
இந்த வேளையில் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டனா சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சென்னப்பட்டனா தொகுதி எம்எல்ஏவாக ஜேடிஎஸ் கட்சியின் மாநில தலைவரான முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி உள்ளார். இவர் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக தற்போது மண்டியா லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவர் விரைவில் மத்திய அமைச்சராகும் நிலையில் சென்னப்பட்டனா தொகுதி காலியாகும்.
இதையடுத்து இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் டிகே சுரேஷ் போட்டியிடுவாரா என்ற கேள்வி டிகே சிவக்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛ பெங்களூர் புறநகர் தொகுதியில் தோல்வியில் இருந்து முதலில் என் தம்பி மீண்டு வரட்டும். அதன்பிறகு மற்றவற்றை பார்க்கலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நான் இனி சும்மா இருக்கமாட்டேன். ஏனென்றால் என் தம்பியின் தோல்வி மூலம் என்னையவே தோற்கடிச்சி இருக்காங்க'' என தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications