பெங்களூர் லீலாவதி.. காதலன் சந்தோஷால் வந்த புதிய சந்தோஷம்.. புடவையை கட்டிப்பிடித்து குமுறும் புருஷன்
பெங்களூர்: கர்நாடகாவின் பெங்களுர் நகரின் பன்னர்கட்டா பகுதியைச் சேர்ந்த லீலாவதி என்பவர் மஞ்சுநாத் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வாழ்க்கையில் சந்தோஷ் என்பவரால் சந்தோஷமே பறிபோனது. சந்தோஷனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட லீலாவதி ஒரு கட்டத்தில் கணவன் குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு ஓடிப்போய்விட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கணவன், அவரது புடவையை கட்டிப்பிடித்து அழுதுள்ளார். அந்த வீடியோ வெளியாகி உள்ளது.
கள்ளக்காதல் என்பது சமூகத்தின் சாபக்கேடாக இருக்கிறது. இன்றைக்கு திருமணத்தை மீறி உறவு என்பது பல இடங்களில் அதிகரித்துள்ளது. திருமணத்தை மீறிய உறவுக்கு சட்ட ரீதியாக எந்த தண்டனையும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. கள்ளக்காதல் என்ற ஒன்று சட்ட ரீதியாக கிடையாது. பிடிக்காவிட்டால் பிரிந்து செல்ல வேண்டும். வேறு ஒருவரை பிடித்து போனாலும், பிரிந்து செல்ல வேண்டும். அதுதான் சட்ட நடைமுறை. ஆனால் சமூகத்தில் எனக்கு ஒருவருடன் கள்ளக்காதல் இருக்கிறது.

வீட்டை விட்டு ஓடுகிறார்கள்
அதனால் இவரை பிரிகிறேன் என்று கூறி பிரிந்து செல்ல முடியாது. அதனை சமூகம் ஒரு நாளும் ஏற்காது. அதேபோல் கள்ளக்காதல் செய்வோர் கடுமையான அவமானங்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இது தான் எதார்த்தம். இதன் காரணமாக பல கள்ளக்காதலர்கள் வீட்டை விட்டு ஓடிப்போவது, கணவனை போட்டு தள்ளுவது அல்லது மனைவியை போட்டு தள்ளுவது அடிக்கடி நடக்கிறது. பெங்களூரில் கள்ளக்காதல் காரணமாக மனைவி மூன்று குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு ஓடிப்போய் இருக்கிறார்.
புதிய காதலன் சந்தோஷ்
பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா அருகே உள்ள பசவனப்புரா கிராமத்தில் லீலாவதி என்பவர் மஞ்சுநாத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். வாடகை கார் ஓட்டுநரான மஞ்சுநாத் - லீலாவதி தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை என மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஆனால், இப்போது அவர்கள் வாழ்க்கையில் புயல் வீசியுள்ளது. லீலாவதி தனது கணவரையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு, தனது புதிய காதலன் சந்தோஷ் என்பவருடன் தப்பி ஓடிவிட்டார். கணவர் மஞ்சுநாத் மற்றும் அவரது குழந்தைகள் கண்ணீரில் தவித்து வருகிறார்கள்.
காதலனுடன் ஓட்டம்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, லீலாவதிக்கு சந்தோஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் திருமண உறவுக்கு மீறிய கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் மஞ்சுநாத் பலமுறை இதைக் குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால், மனைவி லீலாவதி தனது தவறான போக்கைக் கைவிடவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை, லீலாவதி தனது காதலன் சந்தோஷுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

புடவையை கட்டிப்பிடித்து அழும் கணவன்
தற்போது அவரது கணவர் மற்றும் குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றனர். மஞ்சுநாத் இது தொடர்பாக பன்னர்கட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே மனைவியின் புடவையை பிடித்து அழுதபடி கணவன் வெளியிட்ட வீடியோ கர்நாடகாவில் பரவி வருகிறது. பலரும் கள்ளக்காதலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை என்று குரல் எழுப்பி வருகிறார்கள்.
-
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications