பெங்களூர் ஹைவேஸில்.. காருக்குள் எட்டிப்பார்த்த போலீஸ்காரர்.. உறைஞ்சி நின்னுட்டாரு.. உள்ளே அந்த ஜோடி
பெங்களூரு: தன்னை கார் ஏற்றி கொல்ல பார்த்ததாக, போலீஸ்காரர் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கர்நாடகாவில் ஏற்படுத்தி வருகிறது.
பெங்களுரில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் மகேஷ்.. கடந்த 4 வருடங்களாக போலீசாக பணியிலிருந்து வருகிறார்.. இவர் கடந்த ஜனவரி 20-ம் தேதி, மாலை 4 மணிக்கு சப்கார் லே அவுட் 3வது மெயின் ரோட்டில், வாக்கிங் சென்று கொண்டிருந்தார். வாக்கிங் போவதால், யூனிபார்மில் செல்லாமல் மஃப்ட்டியில் சென்றிருக்கிறார்..
வெள்ளை கார்: அப்போது, ரோட்டோரம் தூரத்தில் ஒரு வெள்ளை கார் நின்றிருந்தது.. அந்த கார் அசைந்தும், ஆடிக்கொண்டுமிருந்தது.. ஆனால், தூரத்தில் நின்று பார்த்தால், காருக்குள் யாரும் இருப்பது போல தெரியவில்லை.

எனினும், காருக்குள் யாரோ இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட மகேஷ், அந்த காரில் நடப்பதை, தூரமாக நின்றபடி கவனித்து கொண்டிருந்தார்.. பிறகு, மெல்ல அந்த காருக்குள் எட்டி பார்த்தார். முன்சீட்டில் யாரும் இல்லை என்றதால் பின்பக்க ஜன்னலை தட்டியிருக்கிறார்.. அப்போது காரில், ஒரு இளம்ஜோடி அரைகுறை டிரஸ்ஸில் இருந்தனர்.. அந்த காரின் பின்சீட்டில் இருவரும் பாலுறவில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.
மதிய நேரம்: இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ், பப்ளிக்கில், அதுவும் மதிய நேரத்தில், பொதுமக்கள் ஏராளமானோர் நடமாடும் இடத்தில், இப்படித்தான் நடந்து கொள்வதா? பக்கத்தில் பார்க் இருக்கிறது.. அங்கே குழந்தைகள், உட்பட பலரும் இருக்கிறார்கள். பூங்கா அருகே இப்படி செய்யக்கூடாது என்று மகேஷ் அவர்களை கண்டித்திருக்கிறார்..
அதற்குள், காருக்குள் இருந்த அந்த இளைர, ஆடைகளை சரிசெய்துகொண்டு, டிரைவர் சீட்டில் வந்து உட்கார்ந்தார்.. உடனே மகேஷ், அந்த காரை போட்டோ எடுப்பதற்காக தன்னுடைய செல்போனை வெளியே எடுத்துள்ளார். இதைப்பார்த்ததும் டென்ஷன் அடைந்த இளைஞர், வேகமாக காரை எடுத்து, காரின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த மகேஷ் மீது மோதுவதற்காக போனார்..
கார் பானட் : தன் மீது கார் ஏற்ற வருவதை பார்த்ததுமே, மகேஷ் சுதாரித்துகொண்டு, காரின் பானட்டில் மீது தாவி ஏறிகொண்டார்.. காரை உடனே நிறுத்தும்படியும் பதறினார்.. ஆனால், அந்த இளைஞர், ரிவர்ஸ் கியரை இழுத்து, டக்கென பிரேக் போட்டார்.. பிரேக் போடும் முன்பு காரை 250-300 மீட்டர் தூரத்துக்கு ஓட்டிவந்ததாக சொல்கிறார்கள்.. இதில் மகேஷ் நிலைகுலைந்து கீழே விழுந்துவிட்டார்..
அதற்குள் அந்த இளைஞர், காரை வேகமாக ஓட்டிக்கொண்டு, தப்பி சென்றுவிட்டார். ஆனால், மகேஷ் ஒரு போலீஸ்காரர் என்பது அந்த இளைஞருக்கு தெரியாது. காரில் இருந்து கீழே விழுந்ததில், மகேஷூக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார்.. அவரது கை, கால்கள், முதுகு உட்பட பல இடங்களிலும், காயங்கள் ஏற்பட்டன..
போலீஸார்: பொதுவெளியில், சாலையோரம் திடீரென எஸ்.ஐ. மகேஷ் கீழே விழுவதை பார்த்ததுமே, அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டது. பிறகு, தன்னை கார் ஏற்றி கொல்லப்பார்த்ததாக, நடந்த சம்பவம் குறித்து ஞானபாரதி போலீசல் மகேஷ் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.. மேலும், பூங்கா பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்..
கேமரா: அதில், மேற்கண்ட அத்தனை விஷயமும், பதிவாகியிருந்தது... இப்போது, அந்த கார் யாருடையது என்று தெரியவில்லை.. ஆனால், காரின் நம்பர், கேமராவில் பதிவாகி உள்ளதால், அதை வைத்து குற்றவாளிகளை தேடி கொண்டிருக்கிறார்கள்.. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, பெங்களூர் போலீசார் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications