Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் சிக்கிய இம்ரான் கான்.. 38 இலங்கை மக்களை தமிழகம் வழியாக கர்நாடகா கடத்தியது அம்பலம் - என்ஐஏ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நேற்று கைது செய்யப்பட்ட முகமது இம்ரான் கான் குறித்து பெங்களூர் என்ஐஏ ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். அவர் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஒரு நபருடன் சேர்ந்து இலங்கையில் இருந்து 38 பேரை தமிழகம் வழியாக கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முகமது இம்ரான் கான். இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆள்கடத்தல் தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. இவரை என்ஐஏ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

Bangalore NIA arrested Imran Khan in Theni, He involved Srilankana People Human Trafficking Case

ஆனால் கடந்த 2021ம் ஆண்டில் அவர் திடீரென்று மாயமானார். இந்நிலையில் தான் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அவரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

முதலில் அவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்த்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் இளைஞர்கைள மூளைச்சலவை செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகவும், இலங்கை வழியாக இந்தியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தி வந்ததாகவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில் கைதான முகமது இம்ரான் கான் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கர்நாடகா மாநிலம் மங்களூரில் இலங்கையை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி வசித்து வந்தனர். இதுதொடர்பாக மங்களூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் எப்படி இந்தியாவுக்கு வந்தனர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது இம்ரான் கான் என்பவர் தான் உதவியது தெரியவந்தது. இதையடுத்து முகமது இம்ரான் கானை என்ஐஏவின் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு பிடிக்க முயன்றது.
இதுபற்றி அறிந்த முகமது இம்ரான் கான் தலைமைறைவானர். 2021 முதல் அவர் மாயமானார். இதையடுத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் தான் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அவரை நேற்று கைது செய்தனர். தற்போதைய விசாரணையின்படி 38 பேரை அவர் இலங்கையில் இருந்து கள்ளப்படகில் ராமநாதபுரம் வரவழைத்து அங்கிருந்து கர்நாடகாவின் பெங்களூர் வழியாக மங்களூருவுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதுபற்றி என்ஐஏ விளக்கம் அளித்துள்ளது.

அதில், ‛‛இம்ரான் கான் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஈசன் என்ற இலங்கை நாட்டை சேர்ந்தவருடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். இலங்கையை சேர்ந்த 38 பேரை அங்கிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார். கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகவும், வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் கூறி ஏமாற்றி இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளனர். சர்வதேச அளவில் மனிதர்களை கடத்தும் விவகாரத்தில் முகமது இம்ரான் கானுக்கு தொடர்பு இருந்தது. இவர் இலங்கையை சேர்ந்தவர்களை இந்தியா உள்பட பிற நாடுகளுக்கு கடத்தும் பணியில் தொடர்பு கொண்டுள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+