Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த ஷாக்! பெங்களூரு நைஸ் ரோட்டில் கிடுகிடுவென உயர்ந்த டோல் கட்டணம்! எந்த வாகனங்களுக்கு எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் உள்ள முக்கிய ரோடாக நைஸ் ரோடு இருக்கிறது. இந்நிலையில் தான் நைஸ் ரோட்டின் டோல் கட்டணம் 11 சதவீதம் வரை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் வாகனங்கள் வாரியாக அதிகரிக்கப்பட்ட சுங்கக்கட்டணத்தின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரில் உள்ள முக்கிய ரோடுகளில் ஒன்று நைஸ் ரோடு. இது பெங்களூர்-மைசூரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது நைஸ் ரோட்டில் பயணிக்கும் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.

Bangalore Nice Road toll fee increases up to 11 percent from yesterday, new rates here

இந்த டோல் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக நந்தி இன்ஃப்ரா ஸ்டரக்சர்ஸ அன்ட் காரிடார் என்டர்பிரைசஸ் லிமிடெட் (NICE) சார்பில் புதிய சுங்கக்கட்டணத்துக்கான விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

நைஸ் ரோடு பராமரிப்புக்கான செலவு என்பது அதிகரித்துள்ளது. இதனால் நைஸ் ரோட்டில் 11 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்கு முன்பு இருந்த கட்டணத்தில் இருந்து சராசரியாக ரூ.5 முதல் ரூ.15 வரை இந்த கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஓசூர் ரோடு-பன்னரக்கட்டா ரோடு, பன்னரக்கட்டா ரோடு -கனகபுரா ரோட்டில் காருக்கான சுங்கக்கட்டணம் ரூ.40 ஆகவும், டூவீலருக்கான டோல் கட்டணம் ரூ.15 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கனகபுரா ரோடு - குளோவர் லீவ் சந்திப்பு ரோட்டில் காருக்கு ரூ.30ம், டூவீலருக்கு ரூ.10ம் வசூலிக்கப்பட உள்ளது.

Bangalore Nice Road toll fee increases up to 11 percent from yesterday, new rates here

மேலும் குளோவர் லீப் சந்திப்பு முதல் மைசூர் ரோடு இடையேயான டோல் கட்டணம் காருக்கு 25 எனவும், டூவீலருக்கு ரூ.10 ஆகவும் உள்ளது. மைசூர் ரோடு டூ மாகடி ரோடு இடையே காருக்கு ரூ.55, டூவீலருக்கு ரூ.25 எனவும், மாகடி ரோடு டூ துமகூரு ரோட்டுக்கு காருக்கு ரூ.45, டூவீலருக்கு ரூ.15 எனவும், லிங்க் ரோட்டில் காருக்கு ரூ.60, டூவீலருக்கு ரூ.20 எனவும் சுங்கக்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ், லாரி, மல்டி ஆக்சல் வாகனங்களுக்கான டோல் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கான கட்டணம் என்பது தற்போது இருப்பதை விட ரூ.15 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நைஸ் ரோட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் டோல் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து ஓராண்டுக்குள் மீண்டும் நைஸ் ரோட்டிலும் டோல் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஷாக்காகி உள்ளனர்.

முன்னதாக மைசூர் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரோட்டில் ஜூன் 1 முதல் டோல் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்த ரோட்டில் காரில் ஒருமறை செய்வதற்கான டோல் கட்டணம் ரூ.320 ஆகவும், சென்று மீண்டும் திரும்புவதற்கான கட்டணம் ரூ.485 எனவும் உள்ளது. இதனால் இந்த ரோடுகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+