பெங்களூர் ஐடி பணியாளர்கள் ஹேப்பி! சல்லகட்டா- ஒயிட்பீல்டு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்- மோடி வாழ்த்து!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஐ.டி. நிறுவன பணியாளர்கள் அதிகம் பயணிக்கும் சல்லகட்டா- ஒயிட்பீல்டு இடையேயான மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஐடி பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
பெங்களூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மெட்ரோ ரயில்கள் பெருமளவு உதவி வருகின்றன. பையப்பனஹள்ளி- கெங்கேரி; நாகச்சந்திரா - பட்டு நிறுவனம் வரையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. அதேபோல ஒயிட்பீல்டு- கேஆர் புரம் இடையே மற்றொரு மெட்ரோ ரயில் சேவை கை கொடுத்து வருகிறது.

தற்போது பெங்களூர் நகர மக்களுக்கு மற்றொரு வரப்பிரசாதமாக சல்லகட்டா டூ ஒயிட் பீல்டு வரையிலான மெட்ரோ ரயில் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை இயக்கப்படும். மொத்தம் 43.49 கிலோ மீட்டர் தொலைவு உள்ள இந்த வழித்தட பயண நேரம் 80 நிமிடங்கள். இதற்கான கட்டணம் ரூ60 மட்டும்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா டெல்லி பயணம் மேற்கொண்டதால் தொடக்க விழா இல்லாமலேயே மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. இந்த ரயில் சேவை தொடங்கி இருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Momentous!
— Hardeep Singh Puri (@HardeepSPuri) October 9, 2023
For the convenience of people, services on two stretches of Purple Line of #BengaluruMetro have been started without waiting for any VIP or elaborate opening ceremony to provide seamless connectivity on entire length from Challaghatta to Whitefield!#CitizenOverVIP pic.twitter.com/p9mkZrenSM
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பெங்களூர் மெட்ரோவின் கத்திரிப்பூ நிற வழித்தடத்தின் இரண்டு முக்கிய வழித்தடங்களில் சேவைகள் தொடங்கப்படுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது பெங்களூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications