பெங்களூர் பண்ணை வீட்டில் விடிய விடிய 'ராஜ விருந்து'.. பெண் ஐடி ஊழியர்கள் உள்பட சிக்கிய 31 பேர்
பெங்களூர்: பெங்களூர் அருகே புறநகர் தேவனஹள்ளி தாலுகா கண்ணமங்களாவில் ஒரு பண்ணை வீடு உள்ளது. சனிக்கிழமை அன்று இரவு போதை விருந்து நடந்துள்ளது. பண்ணை வீட்டில் இருந்து அதிக சத்தத்துடன் பாடல் ஒலித்தது. இதுபற்றி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அதிகாலையில் சோதனை செய்ய சென்ற போலீசார், பண்ணை வீட்டில் நடந்த போதை விருந்தில் பங்கேற்ற பெண் இன்ஜினியர்கள் உள்பட 31 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்தியாவின் சிலிக்கான் வேலியான பெங்களூர் ஐடி நிறுவனங்களின் தலைநகரமாக இருக்கிறது. பல லட்சம் பேர் ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு வார இறுதியும் பல பகுதிகளில் பார்ட்டி கலாச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. சென்னையில் எப்படி கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளோ, அதுபோல் பெங்களூரில் தேவனஹள்ளி உள்பட புறநகர் பகுதிகளில் போதை விருந்துகள் நடக்கும். அதேநேரம் மது விருந்தை தாண்டி, போதை பொருட்களுடன் ஆங்காங்கே பார்ட்டி நடத்தப்படுகிறது.ஆண், பெண் என பல இன்ஜினியர்கள் பங்கேற்பார்கள். அப்படி போதை பார்ட்டி நடத்த அனுமதியில்லை.. அவர்கள் சிக்கினால் கைதும் செய்யப்படுவார்கள். அந்த வகையில் பெங்களூரில் இளம் பெண் இன்ஜினியர்கள்7 பேர் உள்பட 32 பேர் போலீசிடம் சிக்கி உள்ளார்கள்.

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா கண்ணமங்களாவில் உள்ள பண்ணை வீட்டில், சனிக்கிஐம நேற்று முன்தினம் இரவு போதை விருந்து நடைபெற்றது. பண்ணை வீட்டில் இருந்து அதிக சத்தத்துடன் பாடல் ஒலித்தது. இதுபற்றி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே உதவி போலீஸ் கமிஷனர் நவீன் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் நேற்று அதிகாலையில் பண்ணை வீட்டில் புகுந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது இளம்பெண்கள், வாலிபர்கள் போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மது பாட்டில்களும் அங்கு கிடந்தது. போலீசாரை பார்த்ததும் இளம்பெண்கள், வாலிபர்கள் ஓட்டம் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களை விடாமல் போலீசார் மடக்கினார்கள்.
அந்த வீட்டில் முழுமையாக போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது கொகைன், ஹைட்ரோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சிக்கியது. மது குடித்து விட்டும், போதைப்பொருட்கள் பயன்படுத்தி விட்டும் இளம்பெண்கள், இளைஞர்கள் நடனமாடி கொண்டாடியது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 7 இளம்பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு வாலிபரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு இந்த போதை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேவனஹள்ளியில் உள்ள குறிப்பிட்ட பண்ணை வீடு சிவாஜிநகரை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகருக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கைதானவர்களில் பலர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் என்பதும், பிரபல ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான 31 பேருக்கும் முதற்கட்டமாக தேவனஹள்ளி அரசு மருத்துவமனையில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதை கண்டறிய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. கைதான 31 பேரில் போதைப்பொருள் விற்பனையாளர்களும் உள்ளனர். கைதான 31 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதைப்பொருட்கள் எப்படி கிடைத்தது என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த போதை விருந்துக்கு பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications