பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Bangalore Weather: 23 ஆண்டுகளில் இல்லாத வெயில்.. உருகுதே பெங்களூர் நகரம்.. உஷ்ண மூச்சு விடும் மக்கள்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக தலைநகரான பெங்களூரு நகரத்தில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் முதல் வாரத்தில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதிகப்படியான மரங்கள் மற்றும் பூங்காக்கள் நிறைந்துள்ள பெங்களூர் நகரம், குளிர்ச்சியான நகரம் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறது. சில்லென்ற காற்று, அடிக்கடி சாரல் மழை என மனதிற்கு இதமாகவும், சிறந்த இடமாகவும் பெங்களூர் இருந்து வருகிறது.

Bangalore recorded the maximum temperature in the first week of March.

தற்போது, கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே மார்ச் முதல் வாரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால், பெங்களூர்வாசிகள் அனல்காற்று வெப்பத்தில் தவித்து வருகின்றனர்.

1996 ஆம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதேபோல் 2017 ஆம் ஆண்டு 37.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கடந்த 2018 ஆம் ஆண்டு 34.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

 அரசியல் ரணகளத்திலும் வெயிலுக்கு வந்த கிளுகிளுப்பை பாருங்க.. 10 ஊர்களில் சதம்.. மதுரையில் 106 டிகிரி அரசியல் ரணகளத்திலும் வெயிலுக்கு வந்த கிளுகிளுப்பை பாருங்க.. 10 ஊர்களில் சதம்.. மதுரையில் 106 டிகிரி

பெங்களூரில் பொதுவாக 32 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். இதற்கு காரணம் அங்கு நிலவும் சீதோசன நிலை. ஆனால், இனி வரும் நாட்களில் 35 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்த வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பெங்களூர்வாசிகள் கடும் வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தற்போது கொளுத்தும் வெயிலால், வீட்டிலிருந்து வெளியில் செல்ல முடியவில்லை என்றும் அவ்வாறு சென்றால் கூட குடை இல்லாமல் செல்ல முடியவில்லை என்றும் பெங்களூர்வாசிகள் குமுறுகின்றனர். இதனால் படிப்படியாக தனது குளுமையான நகரம் என்ற மகுடத்தை பெங்களூர் இழந்து வருகிறது.

பெங்களூரில் பொதுவாக மார்ச் மாதம், 32 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். ஆனால், இம்மாதம் இனி வரும் நாட்களில் 35 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்த வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பெங்களூர்வாசிகள் கடும் வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது .

English summary
37°C Maximum temperature in the first week of March in Bangalore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X