"அவங்க லேப்டாப் கூட அங்கேயே இருக்கு, ஆனா" ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலியான தமிழ் பெண்! நண்பர்கள் வேதனை
பெங்களூர்: ஐபிஎல் கோப்பையை வெற்றி ஆர்சிபி அணியைப் பாராட்டும் வகையில் நேற்று பெங்களூரில் சிறப்புக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். அப்படி உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த தேவி.. நேற்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து அவரது நண்பர்கள் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளனர்.
18 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆர்சிபி அணி இந்தாண்டு கோப்பையை வென்றது. இதைக் கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்குப் பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆர்சிபி அணி ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்க வேண்டிய நிகழ்வாக இருக்க வேண்டிய இது, மிக மோசமான நிகழ்வாக மாறியது.

11 பேர் உயிரிழப்பு
கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 பேரில் ஒருவர் தான் தேவி.. தீவிர ஆர்சிபி அணியின் ரசிகரான இவர், நேற்று அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்று இருக்கிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவரது முழு பெயர் காமாட்சி தேவி. உடுமலைப்பேட்டை பகுதியில் இயங்கும் ஒரு தனியார்ப் பள்ளியின் தாளாளரின் ஒரே மகளான காமாட்சி தேவி, பெங்களூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
என்ன நடந்தது!
இவர் நேற்று வழக்கம் போல வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள விரும்பியிருக்கிறார். இதையடுத்து அவர் மதியம் 2.30 மணியளவில் சில மணி நேரம் பர்மிஷன் கேட்டுக் கொண்டு மைதானத்திற்கு சென்றுள்ளார். இருப்பினும், அதற்கு முன்பே மைதானத்திற்குச் செல்ல தேவையான பாஸ்கள் அனைத்தும் காலியாகிவிட்டன. இருப்பினும் விராட் கோலியின் தீவிர ரசிகையான தேவி, எப்படியாவது சின்னசாமி மைதானத்திற்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.
நேரில் போனால் நிச்சயம் அனுமதி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் தேவி அங்குப் போய் இருக்கிறார். எப்படியும் சில மணி நேரத்தில் திரும்பிவிடலாம் என்று நினைத்த அவர் தனது லேப்டாப் மற்றும் பேக்கை கூட ஆபீசிலேயே விட்டுச்சென்றார். மைதானத்திற்குச் செல்லும் மெட்ரோவில் ஏறிய பிறகு கூட நண்பர்களுக்கு மெசேஜ் போட்டுள்ளார். ஆனால் அதுவே அவரது கடைசி மெசேஜ்ஜாகவும் போய்விட்டது.
லேப்டாப் கூட அப்படியே இருக்கு
இது தொடர்பாக அவருடன் வேலை பார்த்த சிலர் பிரபல ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், "அவரது லேப்டாப் கூட இன்னும் டெஸ்கில் தான் இருக்கிறது. அவரது பேக் அங்கு தான் இருக்கிறது. ஆனால் அவர் மட்டும் இல்லை. இதை எங்களால் ஏற்கவே முடியவில்லை" என்று வேதனையோடு கூறுகிறார். மெட்ரோவில் ஏறிவிட்டதாகத் தேவி மெசேஜ் போட்ட பிறகு சில மணி நேரம் கழித்து மருத்துவமனையில் இருந்து கால் வந்துள்ளது. அப்போது தான் தேவி உயிரிழந்துவிட்டது அவரது நண்பர்களுக்குத் தெரிய வந்தது. இது ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் அங்குப் பேரிடியாகவே இருந்துள்ளது.
என்ன சிக்கல்
இதுபோல ஏகப்பட்ட மோசமான சம்பவங்கள் சின்னசாமி மைதானத்தில் நடந்துள்ளது. பலருக்கும் அங்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. டிக்கெட் வாங்காத பலரும் மைதானத்திற்குள் செல்ல முயன்றதால் அங்கு கேட்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த மைதானத்தைச் சுற்றி இருந்த சாலைகளை முடக்கிய போலீசார், கூடியிருந்த ரசிகர்கள் மீது தடியடியும் நடத்தினர். அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications