பெங்களூரில் ரோட்டில் மட்டுமில்லை.. அப்பார்ட்மெண்ட் உள்ளேயும் டிராபிக் ஜாம்.. டிரெண்டாகும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் முதலில் டிராபிக் பாதிப்பு பிரதான சாலைகளில் மட்டுமே இருந்தது. பிறகு அவை அடுத்தகட்ட சாலைகளுக்கும் வந்தன. இப்போது பெரும்பாலான சாலைகளில் டிராபிக் இல்லாமல் இருப்பதே இல்லை. இப்படி டிராபிக் என்பது மிக பெரிய தலைவலியாக இருக்கும் நிலையில், அது இன்னும் மோசமாகி அப்பார்ட்மெண்ட் வளாகம் வரை கூட வந்துவிட்டது. இது தொடர்பான வீடியோ தான் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

பெங்களூரு என்றாலே போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத பிரச்சினையாகிவிட்டது. அலுவலக நேரங்களில் மட்டுமல்லாமல் இப்போதெல்லாம் மற்ற நேரங்களிலும் கூட டிராபிக் பாதிப்பு ஏற்படுகிறது. நகரின் பல பகுதிகளில் சாலைகளில் நீண்ட நேரம் வாகனங்கள் வரிசையில் நிற்பதைப் பார்க்க முடிகிறது.

Bangalore Traffic Bangalore Traffic

அப்பார்ட்மெண்ட் வளாகம்

ஆனால் இப்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் நிலைமை அதையும் தாண்டி கையை மீறி சென்றுவிட்டது தெளிவாக தெரிகிறது. அதாவது பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் என்பது பெங்களூர் சாலைகளை தாண்டி அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்கு உள்ளேயும் சென்றுவிட்டது போல தெரிகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றை இளம்பெண் பகிர்ந்துள்ளார்.

பெங்களூர் டிராபிக் என்பது சாலைகளை தாண்டி இப்போது அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்குள்ளே வந்துவிட்டதை தான் அது காட்டுகிறது. அப்பார்ட்மெண்ட்டில் இருந்து வெளியேற உள்ளே இருக்கும் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதும், அருகில் உள்ள குடியிருப்பு வளாகத்திற்குள் ஏராளமான கார்கள் மெதுவாக நகர்வதும் அதில் தெளிவாக தெரிகிறது.

வீடியோ

சனிக்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தனது ரூமில் இருந்து முதலில் வெளியே இருக்கும் பிரதான சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை அவர் காட்டுகிறார். பின்னர் கேமராவை அருகில் உள்ள குடியிருப்பு வளாகத்தை நோக்கி திருப்பியபோது, அங்கும் கார்கள் நீண்ட வரிசையில் நின்று மெதுவாக நகர்வது பதிவாகியுள்ளது.

குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள் பிரதான சாலையை அடைவதற்கு முன்பே போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்வதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அப்பார்ட்மெண்ட் வளாகத்தின் வெளியேறும் பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும், சிலர் வளாகத்தை விட்டு வெளியே வருவதற்கே சுமார் 30 நிமிடங்கள் வரை ஆவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நெட்டிசன்கள்

இதனால் பெங்களூரின் சாலை போக்குவரத்து நெரிசல் என்பது தற்போது அப்பார்ட்மெண்ட் வளாகங்கள் வரை வந்துவிட்டதையே இது காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். நெட்டிசன்களும் கூட இதை ஆமோதிக்கும் வகையிலேயே கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்ற நிலையில், பெங்களூர்வாசிகள் பலரும் தங்களது அனுபவங்களையும் சேர்த்து பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "மாலே உள்ள அப்பார்ட்மெண்ட்டில் வசித்தால் இதுதான் நடக்கும். எப்போதும் உள்ளே வரவும் வெளியே செல்லவும் தனித்தனி பாதையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதை கட்டிய பில்டர்கள் காசு பார்த்துவிட்டார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்; ஆனால் மக்கள் சிரமப்படுகிறார்கள்" என பதிவிட்டுள்ளார்.

குறுகிய சாலை

இந்த வீடியோவில் காணப்படும் குடியிருப்பு வளாகம் வர்தூர் பகுதியில் உள்ள பிரிகேட் யுடோப்பியா என பல சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். குறுகிய சாலை, அதிகப்படியான போக்குவரத்து எப்போதுமே அங்கு இருக்கும் என்றும் இதன் காரணமாகவே அங்கு டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+