குடிக்க கூட தண்ணீர் இல்லை.. பெங்களூரில் வசூல் வேட்டையில் வாட்டர் டேங்கர்கள்! கட்டணம் நிர்ணயித்த அரசு
பெங்களூர்: பெங்களூரில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. டேங்கர்களில் தண்ணீர் வாங்கி மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் குவிந்தன. இந்நிலையில் தான் தண்ணீர் டேங்கர்களுக்கான கட்டணத்தை பெங்களூர் மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்து முறைப்படுத்தி உள்ளது.
பெங்களூரில் தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு என்பது ஏற்பட்டுள்ளது. இன்னும் கோடைக்காலம் துவங்காத நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது தலைவிரித்தாடுகிறது. இதனால் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தேவையின்றி தண்ணீரை அதிகமாக பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. மேலும் தட்டுப்பாட்டை போக்க பொதுமக்கள் வாட்டர் டேங்கர்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
தற்போது தண்ணீர் டேங்கர்களுக்கான டிமாண்ட் என்பது அதிகரித்துள்ளது. பெங்களூர் நகரில் மட்டும் இப்போது 4 ஆயிரம் தண்ணீர் டேங்கர்கள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் டேங்கர் தண்ணீர் விற்பனை செய்வோர் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாக தொடங்கினர்.
மேலும் பெங்களூரில் தண்ணீர் பிரச்சனையை அரசு போக்க வேண்டும். அதோடு தண்ணீர் டேங்கருக்கு கட்டணம் நிர்ணயம் செய்து முறைப்படுத்துவது அவசியம் என்று கூறினர். அதன்படி தண்ணீர் டேங்கர்களுக்கான கட்டணத்தை பெங்களூர் மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது. பெங்களூர் மாநகராட்சி சார்பில் பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று பெங்களூர் மாநகர் மாவட்ட கலெக்டர் தயானந்தா கட்டணம் நிர்ணயம் செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதன்படி தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நான்கு மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படும் தண்ணீர் டேங்கருக்கான கட்டணம் கிலோமீட்டர் மற்றும் தண்ணீர் அளவை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 5 கிமீ தூரத்துக்கான 6,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு ரூ.600, 8,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு ரூ.700, 12,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு ரூ.1,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 5 கிமீ முதல் 10 கிமீ வரையிலான தூரம் என்றால் 6,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு ரூ.750, 8,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு ரூ.850, 12,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு ரூ.1,200 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications