போச்சே...போச்சே.. விநாயகர் சிலையுடன் தங்க செயினையும் தண்ணீரில் கரைத்த பெங்களூர் தம்பதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா பெங்களூரில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அங்கு ஒரு தம்பதி தண்ணீரில் விநாயகர் சிலையை கரைக்கும்போது, தவறுதலாக ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்க செயினையும் மறந்து விட்டுள்ளனர்.

அங்கு கிட்டத்தட்ட 300 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. வேறு வழியின்றி தண்ணீரில் இறங்கி விடிய விடிய செயினை தேடியுள்ளனர் மேற்கொண்டு என்ன ஆனது என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.

banglore chain

நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்த நிலையில், மக்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். அப்படி வைக்கப்பட்ட சிலைகளை மக்கள் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

பல இடங்களில் அமைதியாகவும், சில இடங்களில் சிறிய அசம்பாவிதங்களுடனும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் விநாயகர் சிலையை கரைக்கும்போது, ஒரு தம்பதி வித்தியாசமான பிரச்னையை எதிர்கொண்டனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த விநாயகர் சிலையை தண்ணீரில் கரைக்கும்போது, தவறுதலாக ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்க செயினையும் மறந்து விட்டுள்ளனர்.

பெங்களூர் தசரஹல்லி பகுதி அருகே உள்ள விஜயாநகரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி ராமையா – உமாதேவி என்ற தம்பதி கடந்த சனிக்கிழமை மாலை அருகில் உள்ள இடத்தில் விநாயகர் சிலையை கரைக்க சென்றுள்ளனர். அவர்கள் அந்த விநாயகர் சிலைக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான (60 கிராம்), தங்க செயினை அணிவித்துள்ளனர். அதனுடன் அவர்கள் பூ மற்றும் அலங்காரப் பொருள்களுடன் விநாயகர் சிலையை அலங்கரித்துள்ளனர்.

விநாயகர் சிலையை கரைக்கும்போது, தங்க செயினை எடுக்க வேண்டும் என்று ராமையா – உமாதேவி தம்பதி நினைத்திருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அதை மறந்துவிட்டனர். விநாயகர் சிலையை கரைத்துவிட்டு, அந்தத் தம்பதி தங்களின் வீட்டுக்கே திரும்பிவிட்டனர். அதன் பிறகுதான் தங்க செயின் அவர்களின் நினைவுக்கு வந்துள்ளது.

அவர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். நல்ல வேளையாக அவர்கள் விநாயகர் சதுர்த்திக்காக தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த செயற்கை தொட்டியில்தான் (மொபைல் டேங்க்) சிலையை கரைத்துள்ளனர். அங்கிருந்தவர்களிடம் இந்தப் பிரச்னையை சொல்லியுள்ளனர்.

அதற்கு அங்கிருந்த இளைஞர், “நாங்கள் ஒரு செயினை பார்த்தோம். இருப்பினும் அது அலங்காரத்துக்காக போடப்பட்டிருந்த கவரிங் செயின் என நினைத்தோம்.” என்று கூறியுள்ளனர். இதைக் கேட்ட ராமையா – உமாதேவி தம்பதி, தங்களின் செயின் குறித்து காவல்துறைக்கும், எம்எல்ஏ பிரியா கிருஷ்ணாவுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து எம்எல்ஏ பிரியா கிருஷ்ணன், தங்க செயினை கண்டறிய சொன்னார். அதனடிப்படையில் சுமார் 10 பேர் செயினை தேடும் பணியில் இறங்கினார்கள். அந்தத் தொட்டி சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்டது. சுமார் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான சிலைகள் கரைந்திருந்ததாலும், அது இரவு நேரம் என்பதாலும் செயினை உடனடியாக கண்டறிய முடியவில்லை.

இருப்பினும் அவர்கள் தொடர்ந்து விடிய விடிய செயினை தேடினர். இதன் பலனாக 10 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு அந்த தங்க செயினை மீட்டு, தம்பதியிடம் ஒப்படைத்தனர். அதைப் பார்த்து நிம்மதியடைந்த தம்பதி செயினை மீட்டவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். “இனியாவது செயினை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.” என்று அறிவுரை சொல்லி தம்பதியை அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+