பெங்களூர் டிராஃபிக் பிரச்சனை.. விப்ரோ நிறுவனரின் உதவியை நாடிய முதல்வர் சித்தராமையா
பெங்களூர்: டெக் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூருவில் பிரதானப் பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். பெங்களூர் வெளிவட்ட சாலையில் கடும் போக்குவரத்து நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
டெக் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூரில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக பெங்களூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். பெங்களூரில் பிரதானப் பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். அதுவும் மழைக் காலங்களில் நிறுவனங்கள் விடுமுறை மற்றும் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

குறிப்பாக, பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கவே சுமார் 2 மணி நேரம் வரை ஆவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்தியாவிலேயே அதிகளவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நகரில் ஒன்றாக கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் உள்ளது.
பெங்களூர் வெளிவட்ட சாலைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலையே உள்ளது. 1 கிலோ மீட்டர் சாலையை கடக்கவே கிட்டத்தட்ட 1 முதல் 2 மணி நேரத்துக்கும் மேலாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜிக்கு கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அசிம் பிரேம்ஜிக்கு சித்தராமையா எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது, பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் காலை மாலை உள்ளிட்ட பீக் ஹார்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்தப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் விப்ரோ நிறுவன வளாகத்தின் வழியாக குறிப்பிட்ட சில வாகனங்களை இயக்க அனுமதிக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆய்வு செய்ய விரும்புகிறேன்.
விப்ரோ நிறுவனத்தின் வளாகத்தின் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டால் பெங்களூர் வெளிவட்ட சாலைகள் பீக் ஹவர்ஸ்களில் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்துப் பிரச்சனை 30 சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சனைக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்கினால் பெங்களூரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications