வருகிறது புது ஜிஎஸ்டி.. சிறு குறு கடைகளுக்கு புதிய யுபிஐ வரம்பு.. வங்கிகள் பரபரப்பு பரிந்துரை.. ஷாக்
பெங்களூர்: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை வணிகர்கள் கைவிடுவதைத் தடுக்கும் வகையில், ஜிஎஸ்டி உச்சவரம்பை ஒரு கோடி ரூபாயாக உயர்த்த வங்கிகள் பரிந்துரைத்துள்ளன. வணிகர்களுக்கான ஜிஎஸ்டி உச்சவரம்பு ரூ.40 லட்சமாக உள்ள நிலையில், அதை உயர்த்துவது குறித்து நிதிச் சேவைகள் துறை (DFS) ரிசர்வ் வங்கி, NPCI மற்றும் வங்கிகளிடம் கருத்து கேட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக, வரி தாக்கல் செய்வதற்கான தற்போதைய சரக்கு மற்றும் சேவை வரி (GST) உச்சவரம்பு குறித்து வங்கிகள், ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆகியவற்றிடம் DFS கருத்துகளைக் கோரியுள்ளது. சில வங்கிகள் வணிகர்களுக்கான ஆண்டு வருவாய் உச்சவரம்பை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளன.

யுபிஐ ஜிஎஸ்டி சலுகை
யுபிஐ பரிவர்த்தனைத் தரவுகளின் அடிப்படையில் வரி நோட்டீஸ்களை பெற்ற சிறு வியாபாரிகளுக்கு வட்டி மற்றும் அபராதங்களிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்கும் என மத்திய வரிகள் ஆணையர் கோத்ரஸ்வாமி எம். தெரிவித்துள்ளார். சிறுகுறு கடைக்காரர்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் வட்டி மற்றும் அபராதங்களிலிருந்து விலக்கு அளிக்கும். எனவே, இதை அரசியல் பிரச்சினையாக்குவது தேவையற்றது, என்று அவர் தெரிவித்து உள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை வணிகர்கள் கைவிடுவதைத் தடுக்கும் வகையில், ஜிஎஸ்டி உச்சவரம்பை ஒரு கோடி ரூபாயாக உயர்த்த வங்கிகள் பரிந்துரைத்துள்ளன
ஜிஎஸ்டி வரி யுபிஐ சேவை
ஏற்கனவே சிறு வணிக நிறுவனங்களுக்கு கடுமையாக ஜிஎஸ்டி விதிப்பது தவறாக முடியலாம் என்று எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு எட்டு ஆண்டுகளைக் கடந்த நிலையில், இந்த நடவடிக்கைகள் சிறு வணிகங்களை மீண்டும் ரொக்கப் பரிவர்த்தனை பொருளாதாரத்திற்குத் தள்ளக்கூடும், ஆன்லைன் பரிவர்த்தனைகள், குறிப்பாக யுபிஐ மூலம் கிடைத்த முன்னேற்றத்தை இது பாதிக்கும் என்று எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்திய கர்நாடக நடவடிக்கைளை சுட்டிக்காட்டி, ஜிஎஸ்டி முறையின் கீழ் மேற்கொள்ளப்படும் தீவிர வரி விதிப்பு நடவடிக்கைகளை எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை விமர்சித்துள்ளது. பெங்களூரில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் பலருக்கு, யுபிஐ பரிவர்த்தனைகள் போன்ற டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில் அதிகப்படியான வரி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது.
பொருளாதார நடவடிக்கைகளை துல்லியமாக கணக்கிட்டு வரி ஏய்ப்பை குறைக்கும் நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் கவனத்துடன் கையாளப்பட வேண்டும். அதிகப்படியான கண்காணிப்பு சிறு வணிகங்களை முறைசாரா ரொக்கப் பரிவர்த்தனை பொருளாதாரத்திற்குத் தள்ளி, ஒழுங்குபடுத்தும் நோக்கத்தையே தகர்க்கும் அபாயம் உள்ளது என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
ஜிஎஸ்டி - நடவடிக்கை இல்லை
இப்படிப்பட்ட நிலையில்தான் யுபிஐ பரிவர்த்தனைத் தரவுகளின் அடிப்படையில் வரி நோட்டீஸ்களை பெற்ற சிறு வியாபாரிகளுக்கு வட்டி மற்றும் அபராதங்களிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்கும்.. எனவே இது போன்ற விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம், என மத்திய வரிகள் ஆணையர் கோத்ரஸ்வாமி எம். தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடவடிக்கை
இந்தியாவில் யு.பி.ஐ தீவிரமாக பயன்படுத்தப்படும் நகரங்களில் ஒன்று பெங்களூர். தற்போது அங்கே முழுக்க முழுக்க 90% சிறு - குறு கடைகளில் யு.பி.ஐ சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
கர்நாடக வணிக வரித்துறை, மாநிலம் முழுவதும் உள்ள சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி (GST) வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் பயன்படுத்தும் யு.பி.ஐ மூலம் வருவாயை கண்டறிந்து.. இந்த நோட்டீசை அனுப்பி உள்ளனர். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பல வணிகர்கள் பணப் பரிவர்த்தனையை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.
2021-22 முதல் 2024-25 வரையிலான நிதியாண்டுகளின் யுபிஐ (UPI) மற்றும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் மட்டும் ரூ.20 லட்சம் (சேவைகள்) அல்லது ரூ.40 லட்சம் (சரக்குகள்) வர்த்தகம் செய்தவர்களுக்கு, பதிவு மற்றும் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
யுபிஐ - பணப் பரிவர்த்தனை
பணப் பரிவர்த்தனை மட்டுமே மேற்கொண்டால் ஜிஎஸ்டி-யிலிருந்து தப்பிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் பரிவர்த்தனை தரவுகள் மூலம் வணிகத்தின் அளவை அரசு அறிந்திருக்கிறது. "எந்த வடிவில் வருமானம் வந்தாலும், வரி விதிக்கக்கூடிய வருவாய் மீது ஜிஎஸ்டி பொருந்தும்" என்று வணிக வரித்துறை ஜூலை 2025-ல் ஒரு தெளிவுபடுத்தலில் தெரிவித்துள்ளது.
பெங்களூரு மற்றும் பிற நகரங்களில் உள்ள தேநீர் கடைகள், பேக்கரிகள் மற்றும் சிறிய கடைகள் உட்பட பல விற்பனையாளர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக பல கடைகளில் "யுபிஐ இல்லை" என்ற அறிவிப்பு பலகையை காண முடிகிறது. ஆனால், இது தவறான அணுகுமுறை என்று வரி அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். பணமாகப் பெற்றாலும், டிஜிட்டல் முறையில் பெற்றாலும் வருமானத்தை கணக்கிடும்போது ஜிஎஸ்டி-யில் காட்ட வேண்டும்.
வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் (உதாரணமாக பழங்கள், ரொட்டி) விற்பனை செய்பவர்களுக்கு வழிகாட்டவும், சரியான வரி மட்டுமே வசூலிக்கப்படுவதை உறுதிசெய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், மறைக்கப்பட்ட வருவாயை வெளிக்கொணரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications