ஏழை அனாதையான எனக்கு கட்சி சீட் கொடுத்தது.. அமைச்சரை வீழ்த்திய காங்கிரஸ் இளம் எம்.எல்.ஏ.. யார் இவர்?
பெங்களூர்: கர்நாடக தேர்தலில் பாஜக படு தோல்வி அடைந்துள்ள நிலையில், 11 அமைச்சர்களும் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். சிக்கபல்லபூர் தொகுதியில் போட்டியிட்ட சுகாதாரை காங்கிரஸ் வேட்பாளரான 38 வயதே பிரதீப் ஈஸ்வர் என்பவர் தோற்கடித்தார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஆட்சியில் இருந்த ஒரே தென் மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வென்றுள்ளது. 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
65 இடங்களில் மட்டுமே வென்றுள்ள பாஜக தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று இரவு ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் தேர்வு செய்யப்படுகிறார். முதல்வர் பொறுப்பு முதல் 2.5 வருடங்களுக்கு சித்தராமையாவிற்கும் அதன்பிறகு டிகே சிவக்குமாருக்கும் வழங்கப்படலாம் என்று கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. எனினும் நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பிறகுதான் இது பற்றிய விவரம் தெரிய வரும்.
இதனிடையே, தேர்தலில் பாஜக படு தோல்வி அடைந்துள்ள நிலையில், 11 அமைச்சர்களும் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். குறிப்பாக கர்நாடக மருத்துவ கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே சுதாகார் தோல்வி அடைந்துள்ளர். சிக்கபல்லபூர் தொகுதியில் போட்டியிட்ட சுகாதாரை காங்கிரஸ் வேட்பாளரான 38 வயதே பிரதீப் ஈஸ்வர் தோற்கடித்தார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட இளம் வேட்பாளர் இவர்தான் ஆவார். வெற்றிக்கு பிறகு உருக்கமாக பேசிய பிரதீப் ஈஸ்வர் கூறியதாவது:- தெற்கு இந்தியாவில் குறிப்பாக கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அடித்தளம் உள்ளது. ஒரு அனாதை குழந்தையாக இருந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த எனக்கு காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
பணம் எதுவும் கொடுக்காமலே நான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். ஜனநாயகம் இன்னமும் வாழ்கிறது என்பதையே இது காட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். பிரதீப் ஈஸ்வர் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.
தேர்தல் பிரசாரத்தின் போது தனது அனல் பறக்கும் பிரசாரங்களால் கர்நாடகாவில் அவர் போட்டியிடும் தொகுதியை தாண்டியும் பெயர் பெற்றார். 12 ஆம் வகுப்பு வரையே படித்து இருப்பதாக தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய ஈஸ்வர், மருத்துவர் வெற்றி பெறுகிறாரா அல்லது மருத்துவர்களின் ஆசிரியர் வெற்றி பெறுகிறாரா பார்போம் என்று இவர் பேசியது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவியது.












Click it and Unblock the Notifications