15 பெண்கள்.. பெங்களூரு மகேஷ்.. வாய் தான் எல்லாமே.. கேட்டு ஆடிப்போன போலீஸ்
பெங்களூரு: நுனி நாக்கில் ஆங்கிலம், கொஞ்சம் ஸ்மார்ட்டான உடைகள், வாய் நிறைய பொய் இவற்றை வைத்து நிறைய பெண்களை தனது வலையில் விழ வைத்துள்ளார் பெங்களூரு மகேஷ். 'நான் அவன் அல்ல' பாணியில் 15 பெண்களை திருமணம் செய்துள்ளார்.
நான் அவன் இல்லை படம் இவரை பார்த்து தான் எடுத்திருப்பார்கள் போல. கர்நாடகாவில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய காதல் மன்னன் மகேஷ் கேபி நாயக் என்பவரை மைசூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பெங்களூரு பனசங்கரியைச் சேர்ந்த மகேஷ் கேபி நாயக் 2014 முதல் 15 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். கடைசியாக இந்த ஆண்டு மைசூரை சேர்ந்த மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். இந்த அந்த பெண் அளித்த புகாரின் பேரில் மகேஷ் கைது செய்யப்பட்டார்.
தனிப்படை போலீசார் அவரை துமருவில் கைது செய்து மைசூருவிற்கு அழைத்து வந்தனர். அப்போது தான் 15 பெண்களை ஏமாற்றியது போலீசுக்கு தெரியவந்தது.
எப்படி ஏமாற்றினார் என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூரு பனசங்கரியைச் சேர்ந்த மகேஷ் கேபி நாயக்குக்கு 35 வயது ஆகிறது.இவர் பெண்களை ஏமாற்றி சம்பாதித்து சுகபோகமாக வாழ விரும்பினார். அதற்கு திருமணம் செய்வது போல் நடித்து ஏமாற்றினால் சரியாக இருக்கும் என்று எண்ணினார்.
பெண்களை எப்படி வீழ்த்தினார்: நுனி நாக்கில் ஆங்கிலம் பேசக்கூடியவரான மகேஷ், மேட்ரிமோனியல் தளத்தில் உள்ள வசதியான பெண்களை குறிவைத்து இறங்கி உள்ளார். டாக்டர் என்றும் என்ஜினியர், சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும் பெண்களிடம் விதவிதமாக புரொபைல் அனுப்பி உள்ளார். ஸ்மார்ட்டான உடையில், ஸ்டைலாக ஆங்கிலத்தில் பேசியதால் அடுத்தடுத்து பெண்கள் மகேஷை நம்பி உள்ளனர்.
2014ம் ஆண்டு முதல் பெண்ணை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்து எஸ்கேப் ஆனவர். அதன்பிறகு பல பெண்களை திருமணம் செய்து அவர்களுடன் கொஞ்ச நாள் குடும்பம் நடத்திவிட்டு பின்னர் கம்பி நீட்டி வந்துள்ளார். தான் டாக்டர் என்று சொல்லி ஏமாற்றிய பெண்களிடம் டாக்டர் போல் நடிக்க போலியாக கிளினிக் வைத்து நர்ஸ்சுகளை வேலைக்கு வைத்து செட்டப் எல்லாம் செய்திருக்கிறார். துமகுருவில் இப்படி செட்டப் செய்தது தெரியவந்தது.
ஏமாற்றப்பட்ட பெண்கள் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள் ஆவார். மகேஷை திருமணம் செய்த பெரும்பாலான பெண்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆவார். அந்த பெண்கள் தங்களின் பொருளாதாரத் தேவைகளுக்கு மகேஷை சார்ந்திருக்கவில்லை. அவமானம் மற்றும் அசிங்கத்திற்கு அஞ்சி, பயந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்பும் அவர்கள் புகார் கொடுக்கவிலலை.
கடைசியாக மைசூரைச் சேர்ந்த பெண்ணை கடந்த ஜனவரி மாதம் மகேஷ் திருமணம் செய்துள்ளார். ஆந்திராவில் வைத்து திருமணம் செய்த மகேஷ், மைசூர் பெண்ணிடம் கிளினிக் அமைக்க பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தை தராததால் நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு மகேஷ் தப்பி சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் துமகுருவில் இருந்த மகேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மகேஷ் திருமணம் செய்து கொண்ட 15 பெண்களில் 4 பேருக்கு அவரிடமிருந்து குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதனிடையே தன்னை ஏமாற்றிவிட்டதாக மற்றொரு பெண்ணும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெண்களை தன் வலையில் சிக்க வைக்க அவர் செய்த காரியங்களை வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இன்னும் எத்தனை பெண்களிடம், எவ்வளவு ஏமாற்றினார் என்பது அதன் பின்னரே தெரியவரும்.












Click it and Unblock the Notifications