பெங்களூர் ஹோட்டல் குண்டுவெடிப்பு.. குற்றவாளியின் அடையாளம் தெரிந்தது.. சிசிடிவியில் சிக்கிய இளைஞர்
பெங்களூர்: பெங்களூர் ஹோட்டலில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில், குற்றவாளியின் அடையாளம் தெரியவந்து இருப்பதாக கர்நாடாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடகா தலைநகர் பெங்களூர் ஒயிட் பீல்டு அருகே உள்ள குந்தலஹள்ளியில் மிகவும் பிரபலமான உணவமாக 'ராமேஸ்வரம் கபே' கடை உள்ளது. திவ்யா ராகவேந்திர ராவ்-ராகவேந்திர ராவ் தம்பதி இந்த கடைகளை நடத்தி வருகிறார்கள். பெங்களூர்வில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கபே மூலம் மாதம் ரூ.4½ கோடி வருமானம் வருவதாக கூறப்படுகிறது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவாக அவர் பிறந்த ஊரான ராமேஸ்வரம் பெயரை இணைத்து 'ராமேஸ்வரம் கபே' என்ற பெயரில் திவ்யா-ராகவேந்தர் தம்பதி நடத்தி வருகிறார்கள். இந்த ஓட்டலில் வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும். குந்தலஹள்ளியில் உள்ள அந்த ஓட்டலில் நேற்று மதியம் வழக்கம் போல் நேற்று மதியம் 1 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
வெடிகுண்டுகள் வெடித்தன: அப்போது, மதியம் 1 மணியளவில் ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் என 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதனால் ஹோட்டல் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. ஹோட்டலில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தரையில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களும் உடைந்து சிதறின. ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
அடையாளம் தெரிந்தது: குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூர் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல் வெடிகுண்டு தாக்குதல் என்றும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். ஹோட்டலில் குண்டு வெடிக்கும் போது பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் கை கழுவும் பகுதியில் தான் அந்த குண்டுகள் வெடித்து சிதறியது தெரியவந்தது. பெங்களூர் நகரை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.
ஒருவர் கைது: சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் 28-30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் ஹோட்டலில் ரவா இட்லி ஆர்டர் செய்துவிட்டு சென்றது பதிவாகியுள்ளதாகவும் டிகே சிவக்குமார் கூறினார்.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதனிடையே, பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. எனினும் கைதானவர் பற்றிய வேறு எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
-
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
"மாதவிடாய் விடுமுறை என்பது அடிப்படை உரிமை!".. கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு












Click it and Unblock the Notifications