பெங்களூரே திணறிடுச்சு.. 60 வயது தாத்தாவை "பலாத்காரம்" செய்த பெண்.. இதுக்கு ஸ்னேகா உடந்தை.. ஓ மை காட்
பெங்களூர்: பெங்களூரில் ஹோட்டலில் ஒரு பலாத்காரம் நடந்துள்ளது.. இதுகுறித்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. நடந்தது என்ன என்பது குறித்தும் விரிவாக சொல்லி உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப்பில் ஒரு சம்பவம் நடந்தது.. ஜலந்தரில் ஒரு புகழ்பெற்ற ஃபேக்டரியில் அந்த இளைஞர் வேலை பார்த்து வருகிறார்.. சம்பவத்தன்று இரவு, தன்னுடைய டியூட்டியை முடித்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.. அப்போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது..
பலாத்காரம்: அந்த காரில் 4 பெண்கள் இருந்துள்ளனர். அவர்கள் எல்லாருக்குமே 20 வயதுதான் இருக்கும்.. திடீரென அந்த இளைஞனின் அருகில் காரை நிறுத்திவிட்டு, ஒரு துண்டு சீட்டை அந்த நபரிடம் நீட்டி, அதில் உள்ள அட்ரஸ் எங்கே? என்று கேட்டுள்ளனர்.. இளைஞரும், துண்டு சீட்டை வாங்கி அந்த அட்ரஸை பார்த்தார்..

அதற்குள் அந்த பெண்கள், இளைஞரின் முகத்தில், ஸ்பிரே ஒன்றை அடித்துள்ளனர்... அடுத்த செகண்டே இளைஞர் மயங்கி விழவும், அவரை தூக்கி தங்களது காரில் கடத்திக்கொண்டு, கிளம்பிவிட்டனர்... இருட்டு நேரம் என்பதால், சற்று தொலைவில் ஒரு மறைவான இடத்தில் காரை நிறுத்தியுள்ளனர்.. அந்த இளைஞரின் கை, கால்களை கட்டிப்போட்டு, பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியுள்ளனர். அந்த பெண்கள் 4 பேருமே தண்ணி அடித்திருந்தார்களாம்..
மதுபாட்டில்கள்: கையில் மதுபாட்டிலையும் அந்த பெண்கள் வைத்துக்கொண்டு, இளைஞரையும் குடிக்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர்.. பிறகு 4 இளம்பெண்களும், அந்த இளைஞனை மாறி மாறி பலாத்காரம் செய்தார்களாம்.. நைட் டியூட்டி முடித்துவிட்டு நடந்து வந்த இளைஞனை கடத்திய அந்த பெண்கள், மறுநாள் விடிகாலை அதிகாலை 3 மணிக்குதான், இளைஞன் கை மற்றும் கண்களை கட்டி, ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு போயிருக்கிறார்கள்.
கடைசியில், அந்த இளைஞன், தட்டுத்தடுமாறி நடந்தே போலீஸ் ஸ்டேஷன் போய், தனக்கு ஏற்பட்ட அக்கிரமத்தையும், தன்னை பலாத்காரம் செய்ததையும் கண்ணீர் மல்க சொல்லி அழுதுள்ளார்.. இதைதவிர, ஊடகங்களுக்கும் பேட்டி தந்திருந்தார்..
பஞ்சாப் மொழி: அந்த பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்தார்கள் என்றும் நன்றாக ஆங்கிலம் பேசினர் என்றும், தன்னிடம் 2 பெண்கள் பஞ்சாப் மொழியில் பேசினர் என்றும் கூறினார்.. அவர்களின் அடையாளங்களை பெற்றுக் கொண்ட போலீசாரும், அந்த 4 பெண்களை தேடி கொண்டிருப்பதாக சொன்னார்கள்.
ஆனால், அந்த கேஸ் என்ன ஆனது என்று தெரியவில்லை. இரவு நேரங்களில் ஒரு ஆண் தனியாக செல்ல பாதுகாப்பில்லாமல் போய்விட்டதா நம்முடைய நாட்டில்?? என்று பல கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியிருந்தது. இதோ இங்கே ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அதுவும் நம்முடைய பெங்களூரில்..
அரசு ஊழியர்: கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் அந்த நபர்.. ஒரு அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார்.. 60 வயதாகிறது.. இவர் திடீரென ஜெயநகர் போலீஸில் ஒரு புகார் தந்திருந்தார்.
அந்த புகாரில், "என்னுடைய அந்தரங்க போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவோம் என்று மிரட்டி இரண்டு பெண்கள், 82 லட்ச ரூபாயை பறித்து கொண்டார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கேட்டுக் கொண்டிருந்தார். போலீசாரும், இதுதொடர்பான விசாரணையை துவங்கினர். அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
புற்றுநோய் பாதிப்பு: நடந்த சம்பவம் என்ன என்பது குறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு, அவரது நண்பர் மூலமாக அன்னம்மா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார்.. அன்னம்மாவுக்கு 40 வயதாகிறது.. தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறி அரசு ஊழியரிடம் கண்ணீர் சிந்தியுள்ளார்.. பிறகு, 5,000 ரூபாய் உதவி வேண்டும் என்றும் கேட்டுள்ளார்..
அன்னம்மாவின் கண்ணீரை பார்த்து மனமிறங்கிய அந்த அரசு ஊழியரும், 5,000 ரூபாயை தந்துள்ளார். இந்த பணத்தை பெற்றுக்கொண்டதில் இருந்தே, அடிக்கடி அவரை அன்னம்மா தொடர்பு கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.. அடிக்கடி பணமும் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
கடந்த மே மாதம், 60 வயது அரசு ஊழியரை, பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஓயோ ஹோட்டலுக்கு, அன்னம்மா அழைத்து சென்றிருக்கிறார். அங்கு வலுக்கட்டாயமாக, அன்னம்மா அவரை பலாத்காரம் செய்திருக்கிறார்.. அவரை நிர்வாணமாக்கி வீடியோ, போட்டோக்களையும் எடுத்துள்ளார்.
நிர்வாண வீடியோ: இதனிடையே, சினேகா என்ற தன்னுடைய தோழியை, அரசு ஊழியருக்கு அன்னம்மா அறிமுகப்படுத்தியுள்ளார்.. இதற்கு பிறகு, கடந்த ஜூன் மாதம், அன்னம்மாவிடம் இருந்து அரசு ஊழியரின் ஆபாச வீடியோ, போட்டோக்களை சினேகா பெற்றுக் கொண்டுள்ளார்.. இதற்கு பிறகு, அரசு ஊழியரை பணம் கேட்டு மிரட்ட துவங்கி உள்ளார்..

"பணம் கொடுக்காவிட்டால், உங்க வீட்டுக்கு இந்த ஆபாச வீடியோவை அனுப்பிவிடுவேன்" என்று மிரட்டியுள்ளார்.. இதனால் அவமானத்திற்குப் பயந்துபோன அந்த நபரோ, சினேகா சொன்னதுபோலவே, 2 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 82 லட்ச ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார்.. இந்த பணத்தை பெற்றுக்கொண்ட சினேகா, நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பி வைத்துள்ளார்" என்றனர் போலீசார்.
யார் அந்த பெண்கள்: இந்த சம்பவம் ஒருபக்கம் அதிர்ச்சியை தந்தாலும், இன்னொருபக்கம் குழப்பத்தையும் தருகிறது. ஒரு நபரை ஓட்டலுக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பெண், பலாத்காரம் செய்ய முடியுமா? நிர்வாண போட்டோ, வீடியோவை எடுக்க தனி ஒரு பெண்ணால் எடுக்க முடியுமா? இவ்வளவு நடந்த பிறகும், சினேகாவை அறிமுகம் செய்து வைக்கும் அளவுக்கு அன்னம்மாவுடன் ஏன் நட்பில் இருந்தார் அந்த அரசு ஊழியர்? என்றெல்லாம் தெரியவில்லை.
ஆனால், 60 வயது நபரை ஒரு பெண் பலாத்காரம் செய்ததாகவும், இன்னொரு பெண் பணத்தை பறித்துக்கொண்டு, மிரட்டி விரட்டி அடித்ததாகவும் கூறப்படுவது நிஜமாகவே அதிர்ச்சியை தருகிறது. போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து கொண்டிருக்கிறார்களாம்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications