ப்ரீனா சொல்லு வரேன்.. கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. 60 வயது முதியவருக்கு வந்த வினோத ஆசை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் வாடகைக்கு வழங்கிய வீட்டில் வசித்து வரும் கல்லூரி மாணவியை கட்டியணைத்து, முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, ''உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. உன் பக்கத்திலேயே இருக்கணும்னு தோணுது. 10-15 நிமிடம் ப்ரினா சொல்லு வீட்டுக்கே வரேன்'' என்று 60 வயது முதியவர் சொல்லி சென்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.

bengaluru-60-year-old-man-sexually-harassment-to-college-student-who-stay-at-his-flat-for-rent

பெங்களூர் லாங்ஃபோர்ட் டவுனில் உள்ள பெர்லி தெருவில் வசித்து வருபவர் கமலேஷ் குமார். இவருக்கு சொந்தமான இன்னொரு வீட்டில் வாடகைக்கு 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவி தங்கி உள்ளார். இவர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு தான் இந்த வீட்டிற்கு வந்தார்.

இதனால் வீட்டில் சில மாற்றங்கள் செய்வதற்காக புனரமைப்பு பணி நடந்தது. இந்த பணி எப்படி நடந்துள்ளது என்பதை பார்க்க கமலேஷ் குமார் கடந்த 15ம் தேதி மாலை 6.30 மணிக்கு மாணவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு மாணவி மட்டும் தனியாக இருந்தார்.

வீட்டை சுற்றிப்பார்த்த கமலேஷ் குமார் அதன்பிறகு மாணவியிடம் அவரது கல்லூரி, படிப்பு பற்றி கேட்டறிந்தார். மாணவியின் கையில் மெஹந்தி போட்டு இருந்தார். அதை பார்த்த கமேலேஷ் குமார் அவரது கையை பிடித்து மெஹந்தி நன்றாக இருப்பதாக கூறினார். இதனை மாணவி விரும்பவில்லை. கமேலேஷ் குமாரிடம் இருந்து விலகி செல்ல முயன்றார்.

ஆனால் கமலேஷ் குமார் விடவில்லை. மாணவியை தன்பக்கம் இழுத்து கட்டியணைத்தார். பிறகு முத்தமிட்டு தொடக்கூடாத இடங்களை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு சென்றார். அப்போதும், ''10-15 நிமிடங்கள் வரை ப்ரியா இருந்தா சொல்லு.. கண்டிப்பாக வரேன். உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு.. உன் கூடவே இருக்கணும்னு நினைக்கிறேன். உன்னை விட்டு போக எனக்கு மனசே இல்லை'' என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி பெங்களூர் அசோக் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 74 (பெண்ணை மானபங்கப்படுத்துதல்), 75 (பாலியல் தொல்லை) உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.கமலேஷ் குமாரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ''எனக்கு சரியாக வாடகை பணம் தரவில்லை. இதனை கேட்டபோது பிரச்சனை வந்தது. இதனால் பழிவாங்குவதற்காக என் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்'' என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை பதிவு செய்து கொண்ட போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். அடுத்தக்கட்டமாகவும் கமேலஷ் குமார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+