பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நட்பு நாடுகளுக்கு.. ஏவுகணைகள், போர் விமானங்களை சப்ளை செய்ய இந்தியா ரெடி.. ராஜ்நாத் சிங் அறிவிப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (ஐ.ஓ.ஆர்) நட்பு நாடுகளுக்கு பல்வேறு வகையான ஏவுகணை சிஸ்டம்கள், லைட் காம்பாக்ட் விமானம் (எல்.சி.ஏ) மற்றும் ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் மற்றும் பீரங்கித் துப்பாக்கிகள் உள்ளிட்ட பிற ஆயுத சிஸ்டங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று நடைபெற்ற ஐ.ஓ.ஆர் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார்.

Bengaluru air show: India ready to supply LCA, missiles to IOR nations

இந்திய கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளுக்கு இந்தியா எப்போதும் தோழமையாக இருந்து வருவதை குறிப்பிட்ட ராஜ்நாத்சிங், "இந்தியா எப்போதும் மனிதாபிமான உதவி, போர் அல்லாத வெளியேற்ற உதவி (NEO) தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளது. இந்த பிராந்தியத்தில் நிகழ்ந்த இயற்கை பேரழிவு தொடர்பான பல நிகழ்வுகளில் முதலில் ஓடி வந்து உதவியது இந்தியாதான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். " என்று அவர் கூறினார்.

அண்டை நாடுகளான மொரீஷியஸ், மாலத்தீவுகள், மடகாஸ்கர், சீஷெல்ஸ் உள்ளிட்டவற்றுக்கு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைத்துள்ளோம். ரெம்டெசிவிர் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகள் போன்ற மருந்துகள் மற்றும் பிற மருத்துவ பொருட்களுடன் அவர்களுக்கு கொடுத்து உதவியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெங்களூரில் ஏரோ இந்தியா 2021ன் இரண்டாவது நாளில், ஐ.ஓ.ஆர் பாதுகாப்பு அமைச்சர்களின் கான்க்ளேவ் நடைபெற்றது.
13வது ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த புதன்கிழமை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விமான கண்காட்சியின் நிறைவு நாளாகும்.

English summary
India is ready to supply various types of missile systems, Light Combat Aircraft (LCA) and other weapons systems including missiles, helicopters, tanks and artillery guns to friendly foreign countries in the Indian Ocean Region (IOR), Defence Minister Rajnath Singh said on Thursday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X