அடுத்த பாண்டிச்சேரியாக மாறும் பெங்களூர்! பீர் விலை அப்படியே குறையுது.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையா, சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். பட்ஜெட்டில் 60 ஆண்டுகள் பழமையான கலால் சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்தார். குறிப்பாக மதுபான வரி விதிப்பு உலக தரத்திற்கு மாற்றப்பட்டு, விலை கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் பெங்களூரில் பீர் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம், மதுபான விலையை நிர்ணயிப்பதில் அரசின் பங்கு முடிவுக்கு வந்துள்ளது. புதிய கொள்கையின் கீழ், விலை நிர்ணயம் கட்டுப்படுத்தப்படாமல், உற்பத்தியாளர்கள் சந்தை போட்டிக்கு ஏற்ப விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம்.

தற்போது கர்நாடகாவில் மதுபானங்கள் 16 அடுக்குகளாக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது மதுபானத்தை தயாரிக்க ஆகும் உற்பத்தி செலவு, அதன் தரத்தை வைத்து,
- குறைந்த விலை அடுக்கு
- நடுத்தர விலை அடுக்கு
- உயர்தர விலை அடுக்கு
புதிய வரி விதிப்பு முறை
என பல பிரிவுகள் உள்ளன. கர்நாடகாவில் இப்படி 16 பிரிவுகள் இருக்கின்றன. இந்நிலையில், இந்த பிரிவுகளை 16லிருந்து 8 ஆக சுருக்க மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது. அதேபோல இனிமேல் மதுபானத்தின் மொத்த அளவை வைத்து வரி விதிக்கப்படாது. மாறாக அதில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவை வைத்துதான் வரி விதிக்கப்படும். இந்த மாற்றம் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் படிப்படியாக அமலாகும்.
உரிமம் வழங்கும் முறைமாற்றம்
மதுபானங்கள் கடத்தப்படுவதை தவிர்க்கவும், பிளாக்கில் வருவாய் ஈட்டுவதை தடுக்கவும், பிளாக்செயின் அடிப்படையிலான கண்காணிப்பு வசதியை உருவாக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதேபோல மதுபான ஆலைகள் இனி 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இனி இந்த ஆலைகளுக்கான லைசென்ஸ், ஆன்லைனில் தானாகவே புதுப்பிக்கப்படும்.
மதுபான சுற்றுலா
இந்த பட்ஜெட் ஆல்க்-பீர் சுற்றுலாவையும் ஊக்குவிக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதாவது, இனி சுற்றுலா பயணிகள் நேரடியாக மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு சென்று அங்கு சுவை பார்த்து, சரக்கை வாங்கிக்கொள்ளலாம். ஊட்டியில் தேயிலை தூள் உற்பத்தி இடங்களுக்கு நேரில் செல்லும்போது, டீ சாம்பிள் கொடுப்பார்களே அதுபோல.. இனி கர்நாடகாவில் மதுபானங்களை, உற்பத்தி ஆலைகளுக்கே சென்று சுவைக்க முடியும். அங்கிருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளவும் முடியும். பீர் லேபிள்களில் மால்ட், சர்க்கரை எவ்வளவு சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் நீக்கப்பட்டது.
வருவாய் இலக்கு
நடப்பு நிதியாண்டில், கலால் வருவாய் 12.7 சதவீதம் அதிகரித்து, பிப்ரவரி மாத நிலவரப்படி ரூ. 36,492 கோடியை எட்டியுள்ளது. வருகின்ற 2026-27 நிதியாண்டுக்காக, மாநில அரசு ரூ. 45,000 கோடி என்ற லட்சிய வருவாய் இலக்கை நிர்ணயித்துள்ளது.
பட்ஜெட்டில் கலால் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதன் மூலம் இனி, கர்நாடகாவில் பீர்களின் விலை குறையலாம் என்று சொல்லப்படுகிறது.
-
பெங்களூரில் நாளை மாபெரும் போராட்டம்.. தமிழர்களை தமிழில் அழைத்த காக்ரோச் ஜனதா பார்ட்டி சௌரவ் தாஸ்! -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications