காரணமே வேற.. "இருமல் மருந்தும் + இரும்பு மனுஷியும்".. இறுக்கிய சுசனா சேத்.. திரும்ப திரும்ப அதேதான்
பெங்களூர்: தன்னுடைய குழந்தை, கணவரின் ஜாடையில் இருந்துள்ளதும், சுசனா சேத்துக்கு பிடிக்கவில்லை.. அந்த பிஞ்சுவை ஈவிரக்கமின்றி கொன்றதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
தான் தங்கியிருந்த ஹோட்டல் ரூமில், 4 வயது மகனை கொடூரமாக கொன்றுள்ளார் சுசனா சேத் என்ற மெத்த படித்த அறிவாளி.. குழந்தையின் சடலத்தை சூட்கேஸில் வைத்து, ஓட்டலையும் காலி செய்துவிட்டு டாக்ஸியில் தப்பிச்செல்லும்போது, போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பெனிகள்: 10 வருடங்களுக்கு முன்பு, ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வந்த வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்துள்ளார் சுசனா சேத்.. இருவருக்கும் கருத்து வேறுபாடு முற்றிவிடவும், விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார் வெங்கட்ராமன். ஆனால், விவகாரத்து தர விரும்பாத சுசனா சேத், கணவன் மீதிருந்த ஆத்திரத்தில் குழந்தையை கொன்றுவிட்டார்.
சுசனா சேத் கடந்த 2022ல், வெங்கட்ராமன் மீது குடும்ப வன்முறை தொடர்பான புகார் வழங்கியுள்ளார். விவாகரத்து வழக்கில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெங்கட்ராமன், தன்னுடைய 4 வயது மகனிடம் பேச கோர்ட் அனுமதி தந்துள்ளது. இந்த உத்தரவை சுசனா சேத்-தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று விசாரணை அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருமல் மருந்து: குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது, ஆனால், தலைகாணி அல்லது துணியால் குழந்தையை நெரித்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
ஏற்கனவே தன்னுடைய பையில் ஒரு இருமல் பாட்டில் வைத்திருந்துள்ளார்.. இன்னொரு இருமல் மருந்தையும் ஓட்டல் ஊழியரிடம் சொல்லி வாங்கி வர செய்துள்ளார். ஒரு பாட்டில் சிறியது, இன்னொரு பாட்டில் பெரியது. 2 இருமல் பாட்டிலில்உள்ள மருந்தையும் குழந்தைக்கு ஊற்றி உள்ளார்.
ஓவர்டோஸ் ஆகிவிடவும் குழந்தைக்கு மயக்கம் வந்துள்ளது.. அப்போதுதான் கழுத்தை நெரித்துள்ளார்.. ஆனால், கைகளால் நெரிக்காமல், துணியால் நெரித்துள்ளார்.. இதனால் குழந்தைக்கு மூச்சு மேலும் திணறியுள்ளது.. ஒரு கட்டத்தில், முகம் சிவந்துபோய், மூக்கிலிருந்து ரத்தம் நிறைய கொட்டியுள்ளது.. அப்போதுதான் கடைசியாக கழுத்தை இறுக்கியிருக்கிறார்.
ரூம் சர்வீஸ்: ரூமைவிட்டு கிளம்பும்வரை, ரூம் சர்வீஸைகூட அறைக்குள் அனுமதிக்காமல் இருந்துள்ளார்.. காரில் சடலத்துடன் முன்சீட்டில் உட்கார்ந்துக்கொண்டு, AC-யை அதிகமாக வைத்துக்கொண்டு, வழியெல்லாம் காருக்குள் சென்ட் அடித்து கொண்டே வந்தாராம்..
தற்போது 6 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் சுசனா சேத். குழந்தையை எப்படி கொன்றார் என்ற பகீர் தகவல்கள் வாக்குமூலங்களில் வெளியாகி கொண்டிருக்க, மறுபுறம் போலீசாரின் விசாரணைகளும் துரிதமாகி வருகின்றன.
விவாகரத்து: அந்தவகையில் 2 விதமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.. கணவர் வெங்கட்ராமனுக்கு 9 லட்சம் ரூபாய் சம்பளமாம்.. விவாகரத்து விசாரணையின்போது, வெங்கட்ராமன் 9 லட்சம் சம்பாதிப்பதை சுட்டிக்காட்டி சுசனா சேத், குழந்தையின் பராமரிப்பிற்காக மாதம் 2.5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டு வாதாடினாராம். பணத்தில் குறியாய் இருந்த சுசனா சேத், குழந்தையை வெங்கட்ராமனுடன் வீடியோ காலில் பேசக்கூட அனுமதிப்பது கிடையாதாம்.
இந்நிலையில், சுசனா சேத் தங்கியிருந்த ஹோட்டல் ரூமில், ஒரு கடிதம் கிடைத்துள்ளதாம்.. இந்த கடிதத்தை சுசனா சேத், தன்னுடைய தற்கொலைக்கு முன்பு, கைப்பட எழுதி வைத்ததாகவும் தெரிகிறது.
கடிதம்: அந்த கடிதத்தில், "என்னுடைய கணவர், என்னுடைய மகனை சந்திக்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என்று குறிப்பிட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த கடிதத்தை கோவா போலீசார் சீல் செய்து, நிபுணர்கள் பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை எழுதியது சுசனா சேத் தானா? எப்போது எழுதினார்? என்பதெல்லாம் இனிமேல் தெரியவரும்.
ஆனால், கடிதம் வரைக்கும் எழுதி வைத்துள்ள சுசனா சேத், தன்னுடைய மகனை கொன்றதாக இதுவரை ஒப்புக் கொள்ளவேயில்லையாம்.. தன் மகன் எப்படி இறந்தான் என்றே தெரியாது என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறாராம். இத்தனைக்கும், போலீஸ் விசாரணையில் தற்போது இருந்தபோதும்கூட, கணவனுடன் என்ன பிரச்சனை? ஏன் இவ்வளவு வன்மம்? எதற்காக கருத்து வேறுபாடு என்பதைகூட போலீசில் சொல்லவில்லையாம்..
-
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications