ஆகஸ்ட் மாத செலவு மட்டும் ரூ.5.90 லட்சமாம்.. இந்த லிஸ்ட்டை பாருங்க.. அதிர வைத்த பெங்களூர் தம்பதி
பெங்களூர்: பெங்களூரில் வசித்து வரும் ஒரு இளம் தம்பதி தங்களின் ஆகஸ்ட் மாத செலவு மட்டும் ரூ.5.90 லட்சம் என்று வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும் எதற்கெல்லாம் அவர்கள் செலவு செய்தனர் என்பது பற்றி வீடியோவில் விளக்கி உள்ளனர். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை பார்க்கும் அனைவரும் பிரமித்துப்போயினர்.
நம் நாட்டில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை உள்ளனர். அன்றாட உணவு தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் ஒருதரப்பினர் வசித்து வரும் நிலையில் இன்னொரு தரப்பினர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இது ஒவ்வொருவரின் வேலை, தொழில், பிறந்த குடும்பம் உள்ளிட்டவற்றை சார்ந்து அமைந்துள்ளது.

மேலும் ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் கூட நன்கு படித்து கைநிறைய சம்பளம் வாங்கி பலரும் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இருப்பினும் சிலர் தினக்கூலி வேலையை நம்பியே உள்ளனர். இன்று உழைத்தால் தான் சாப்பாடு என்று ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்படியான சூழலில் தான் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் இளம் ஜோடி உள்ளனர். அவர்களின் பெயர்கள் பிரக்ரிதி - ஆஷிஷ். இவர்கள் 2 பேரும் தங்களின் ஆகஸ்ட் மாத செலவை பட்டியலிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ஆடிப்பாடி அவர்கள் செலவு கணக்கை கூறியுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.5.90 லட்சம் செலவழித்துள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர்.
இதுபற்றி அவர்கள் வெளியிட்ட வீடியோவில், ‛‛ நாங்கள் குடியிருக்கும் பிளாட்டின் வாடகை ரூ.42 ஆயிரம், உடற்பயிற்சிக்கு இருவரும் தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர் வைத்துள்ளோம். Pilates கிளாஸ் செல்கிறோம். இதற்கு ரூ.40 ஆயிரம் செலவானது. வீட்டு மளிகை பொருட்கள், உடற்பயிற்சியின்போது எடுத்து கொள்ள வேண்டிய உணவு பொருட்களுக்கு ரூ.20 ஆயிரம் செலவாகி உள்ளது.
வீட்டு வேலை, பிற பயன்பாடு, ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் செலவானது. கார், இன்சூரன்ஸ் மற்றும் அழகு நிலையம் சென்று வந்தது, பரிசுகள் வாங்கியது என்று மொத்தம் ரூ.15 ஆயிரம் செலவாகி உள்ளது. SIP-யில் ரூ.1 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. 2 இன்டர்நேஷன்ல மற்றும் 2 உள்நாட்டு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளோம். இதற்கான விமான டிக்கெட் முன்பதிவுக்கு ரூ.3.50 லட்சம் செலவாகி உள்ளது. மொத்தம் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.5.90 லட்சம் செலவாகி உள்ளது'' என பட்டியலிட்டுள்ளனர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications