15 நாட்கள் கழித்து வீடு திரும்பிய கொரோனா போராளி டாக்டர் விஜயஸ்ரீ.. பெங்களூரில் உற்சாக வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 15 நாட்கள் கழித்து வீடு திரும்பிய கொரோனா போராளி டாக்டர் விஜயஸ்ரீக்கு பெங்களூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, நெகிழ்ச்சியால் அவரை கண்கலங்க வைத்துவிட்டது.

Recommended Video

    15 நாட்கள் கழித்து வீடு திரும்பிய கொரோனா போராளி டாக்டர் விஜயஸ்ரீ

    கொரோனா நாடு முழுவதும் பரவிய நிலையில் கடந்த 4 மாதங்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தன்னலம் பாராமல் நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகிறார்கள். இவர்கள் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளித்தவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

    விஜயஸ்ரீ

    விஜயஸ்ரீ

    இந்த நிலையில் பெங்களூர் எம்எஸ் ராமையா மெமோரியல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் விஜயஸ்ரீ 15 நாட்கள் கழித்து அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் கைகளை தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் வரவேற்பால் நெகிழ்ச்சி அடைந்தார் விஜயஸ்ரீ.

    மரியாதை

    மரியாதை

    ஒரு கட்டத்தில் அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. மருத்துவர்கள், காவலர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்கள போராளிகள். இவர்கள் என்றென்றும் போற்றப்படக் கூடியவர்கள். அவர்களின் தன்னலமற்ற சேவைக்காக மரியாதை கொடுப்பது சாலச் சிறந்தது.

    போராளிகள்

    போராளிகள்

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சாலைகளில் மக்கள் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளும் காவலர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும் தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் மக்களின் நலனுக்காக களத்தில் நின்று போராடுகிறார்கள் இந்தப் போராளிகள்.

    மலர் தூவல்

    மலர் தூவல்

    இவர்களுக்காக முப்படைகளின் சார்பில் இன்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முப்படைகளின் விமானங்கள் மருத்துவமனைகள் மீது மலர்களை தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த நன்னாளில் பெங்களூர் டாக்டர் விஜயஸ்ரீக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பளித்தது பொருத்தமானதாகிவிட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+