"ஆயிரம் ஏரிகளின் நகரம்" பெங்களூர்.. இப்போ ஓங்கி ஒரு மழை பெய்தாலே திணறுது.. காரணம் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் சாலைகள் ஆறுகளாக மாறியது, போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. சில கீழ் பாலங்களில் பாதி அளவுக்கு வெள்ளத்தில் மூழ்கின. ஆபீஸ் செல்ல வேண்டிய மக்கள் மணிக்கணக்கில் டிராபிக்கில் சிக்கித் தவித்தனர். உலகின் திட்டமிடப்பட்ட சிறந்த நகரங்களிலும் கூட, அவை தாங்கும் கொள்ளவை மீறி மழை பெய்தால் வெள்ளம் ஏற்படலாம். ஆனால் பெங்களூரில் இது பொருந்தாது. இங்கு லேசான மழை பெய்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் இதே கதை தான். ஆனால், பெங்களூர் மாநகர மாநகராட்சி (BBMP) மற்றும் பிற அதிகாரிகள் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இல்லை.

வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று மழைநீர் செல்ல வழி இல்லாதது. முதன்மை, துணை மற்றும் கிளை வடிகால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளன, அல்லது அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களால் தடுக்கப்பட்டுள்ளன. இது பிரச்சனையின் ஒரு பகுதி தான்.

பெங்களூர் பூகோள அடிப்படையில் உயரமான பகுதியில் அமைந்துள்ளது. கடல் பரப்பிலிருந்து சுமார் 3000 அடி உயரம் என்பதால் மலைப்பாங்கு போல ஏற்ற இறக்கமான நிலப்பரப்பு உண்டு. கோரமங்களா-சல்லகட்டா பள்ளத்தாக்கு, ஹெப்பால் பள்ளத்தாக்கு மற்றும் விருஷபாவதி பள்ளத்தாக்கு என நிலவியலை மூன்று பிரிவாக பிரிக்கலாம். இதன் வழியாக நீர் ஓடி வழிந்தோட வேண்டும்.

இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) ஆய்வில், பெங்களூர் நிலப்பரப்பு ஒரு காலத்தில் ஒன்றோடொன்று ஏரிகளால் இணைக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கிடையே தண்ணீர் பரிமாற்றம் இருந்தது. 1800ல் கிட்டத்தட்ட 1,500 நீர்நிலைகளில் இருந்து, இன்று 200க்கும் குறைவான நீர்நிலைகள் மட்டுமே உள்ளன.

நகர்ப்புற திட்டமிடல் இல்லை

ஆங்கிலேயர்கள் பெங்களூரை ஒரு காலத்தில் 'ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு' என்று அழைத்தனர். இன்று அறிவியல்பூர்வமற்ற நகர்ப்புற திட்டமிடல் இந்த நகரை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. நிலப்பரப்பு மாற்றங்கள், ஏரி ஆக்கிரமிப்புகள், அடைக்கப்பட்ட மழைநீர் வடிகால், ஏரி இணைப்பு இழப்பு ஆகிவைதான் திங்கள்கிழமை பார்த்த வெள்ளத்திற்கு ஒரு காரணம்.

ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியான பிரச்சினைகள் இருந்தபோதிலும், ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (BBMP) மற்றும் பிற சிவில் அதிகாரிகள் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இல்லை.

மனித பேராசை மற்றும் அரசியல் ஊழல்

கனமழையின் போது பெங்களூரு முடங்குவது இயற்கையின் செயல் மட்டுமல்ல, மனித பேராசை மற்றும் அரசியல் ஊழலின் விளைவாகும். மேலும் சீரழிவைத் தடுக்க அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சுரங்கப்பாதை சாலைகள் மற்றும் ஸ்கைடெக் போன்ற புதிய திட்டங்களுடன் 'பிராண்ட் பெங்களூரு'வை மேம்படுத்துவது குறித்து அடிக்கடி விவாதித்து வருகிறார். பிரமாண்டமான திட்டங்களைத் தொடரும் முன் அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்வது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதை மழை காட்டிவிட்டது.

அரசு நடவடிக்கைகள் தேவை

நகரம் பெருத்துக் கொண்டே போவதை அரசு நிறுத்த வேண்டும் மற்றும் எதிர்கால முதலீடுகளை பிற மாவட்டங்களுக்கு திருப்பி விட வேண்டும். அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை அகற்றுதல், வடிகால்களை சுத்தம் செய்தல், நீர்நிலைகளை சீரமைத்தல் ஆகியவை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகளாகும்.

பெங்களூருவின் தற்போதைய நிலை, நகர்ப்புற திட்டமிடல் தவறாகப் போனால் என்ன நடக்கும் என்பதை அப்பட்டமாக நினைவூட்டுகிறது. மோசமான திட்டமிடல் மற்றும் திட்டமிடாத வளர்ச்சி காரணமாக கனமழைக்கு எதிராக நகரின் தாங்கும் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது.

பெங்களூருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகப் பெரியது. அதன் கடந்த கால பெருமையை மீட்டெடுப்பது இப்போது சாத்தியமற்றதாக இருந்தாலும், உடனடி நடவடிக்கைகள் இன்னும் சரிவைத் தடுக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+