குப்பை கொட்ட போறேன்".. கணவரிடம் சைஸா சொல்லிட்டு சலூன் கடைக்காரருடன் ஓட்டம் பிடித்த மனைவி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூருவில் குடும்பத் தலைவி ஒருவர், தனது கணவரிடம் குப்பை கொட்டச் செல்வதாகக் கூறிவிட்டு, சலூன் கடைக்காரருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. வீட்டின் வாசலில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்டிவிட்டு, அப்படியே மாயமான அந்தப் பெண்ணின் திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி விட்டது.. அதுதான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.. என்ன நடந்தது?

பெங்களூரு கிரி நகர் பகுதியில் வசித்து வந்தவர் பிரியங்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர்.

Bengaluru Girinagar Crime News Missing Woman Naveen Hair Stylist Viral News CCTV Video

இவரது கணவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைஸராக வேலை பார்த்து வருகிறார்.. இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கிரி நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்குக் குடிபெயர்ந்தனர்..

புதிய வீட்டிற்கு வந்த பிறகு, அந்தப் பகுதிக்கு அருகில் இருந்த ஒரு சலூன் கடைக்கு பிரியங்கா அடிக்கடி சென்று வந்துள்ளார்.. அங்கு ஹேர் ஸ்டைலிஸ்டாகப் பணியாற்றி வந்த நவீன் என்பவருடன் பிரியங்காவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது..

குப்பை கொட்டப் போறேன்

ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய இந்தப் பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் ரகசியக் காதலாக மாறியுள்ளது.. இருவரும் அடிக்கடி செல்போனில் மணி கணக்கில் பேசி வந்துள்ளனர்.. இந்த விவகாரம் கணவருக்குத் தெரியாமல் பிரியங்கா மிக ரகசியமாகப் பராமரித்து வந்துள்ளார்..

சம்பவத்தன்று இரவு, வழக்கம் போல கணவர் வேலையிலிருந்து வீட்டிற்குத் திரும்பியிருந்தார்.. அப்போது பிரியங்கா தனது கணவரிடம், "வீட்டில் குப்பை அதிகமாகச் சேர்ந்துவிட்டது, அதை தெரு முனையில் உள்ள தொட்டியில் கொட்டிவிட்டு வருகிறேன்" என்று மிக எதார்த்தமாகக் கூறிவிட்டு கையில் குப்பை வாளியுடன் வெளியே சென்றுள்ளார்..

தனியாக கிடந்த குப்பை வாளி

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்குத் திரும்பாததால் கணவர் பதற்றமடைந்தார்.. இரவு 10 மணி கடந்தும் மனைவி வராததால், அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.. அப்போது தெரு முனையில் குப்பை வாளி மட்டும் தனியாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.. உடனடியாக கிரி நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரியங்கா குப்பையைக் கொட்டிவிட்டு, அங்கு தயாராக நின்றிருந்த நவீனின் பைக்கில் ஏறிச் செல்வது தெளிவாகப் பதிவாகியிருந்தது.. இவர்கள் இருவரும் கடந்த 2 வாரங்களாகவே வீட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டு வந்ததும், அதற்காகப் பிரியங்கா வீட்டிலிருந்த சில நகைகளையும் பணத்தையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்திருந்ததும் விசாரணையில் அம்பலமானது..

2 குழந்தைகளின் தாய்

தனது 2 குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றியும், கணவரின் உழைப்பைப் பற்றியும் கவலைப்படாமல், ஒரு சலூன் கடைக்காரருடன் "போலி" காதலுக்காகத் தாய் ஓட்டம் பிடித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது..

கிரி நகர் போலீஸார் தற்போது நவீன் மற்றும் பிரியங்காவின் செல்போன் எண்களை வைத்து அவர்கள் எங்கு பதுங்கியிருக்கிறார்கள் எனத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.. வாடகை வீட்டை மாற்றிய சில நாட்களிலேயே இத்தகைய சம்பவம் நடந்தது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கணவரிடம் குப்பை கொட்டச் செல்வதாகக் கூறிவிட்டு, தனது வாழ்வையே குப்பையாக்கிக் கொண்ட பெண்ணின் இந்தச் செயல் அதிர்ச்சியைத் தந்துள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+