பெங்களூரில் முடங்கும் மெட்ரோ ரயில் சேவை.. ஏப்.,5 ம் தேதி பராமரிப்பு பணி அறிவிப்பு
பெங்களூர்: பெங்களூரில் 'பர்பிள் லைன்' வழித்தடத்தில் ஏப்ரல் 5ம் தேதி இரண்டு மணிநேரம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. அன்றைய தினம் மெட்ரோ ரயில் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை பர்பிள் லைனில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. பெங்களூர் விஜயநகர் மெட்ரோ நிலையம் மற்றும் அத்திகுப்பே மெட்ரோ ரயில் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இந்த பராமரிப்பு பணியின் காரணமாக நாடபிரபு கெம்பேகவுடா நிலையம் (மெஜஸ்டிக்) மற்றும் மைசூரு சாலை மெட்ரோ நிலையம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு மணி நேரம் முழுமையாக நிறுத்தப்படும்.
இதனால் இந்த நேரத்தில் பயணிகள் தங்களின் பயண திட்டத்தை முன்கூட்டியே மாற்றி கொள்ள வேண்டும். பிறகு காலை 9 மணிக்கு மேல் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கும்.
அதேவேளையில் பிற வழித்தடங்களில் இயங்கும் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் காலை 7:00 மணி முதல் இயங்கும். அதன்படி சல்லகட்டா முதல் மைசூரு சாலை வரையும், கெம்பேகவுடா மெட்ரோ ரயில் நிலையம் ( மெஜஸ்டிக்) முதல் ஒயிட்பீல்ட் (காடுகோடி) வரையிலும், மாதவரா முதல் சில்க் இன்ஸ்டிடியூட் வரையிலும், ஆர்.வி. சாலை முதல் பொம்மசந்திரா வரையிலும் மெட்ரோ ரயில் தொடர்ந்து இயங்கும்'' என கூறப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications