காத்திருப்பு நேரம் குறையுது..பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் தந்த குட்நியூஸ்.. ஐடி ஊழியர்கள் ஹேப்பி
பெங்களூர்: பெங்களூரில்ஆர்வி ரோடு முதல் பொம்மசந்திரா இடையேயான மஞ்சள் வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் தான் இந்த வழித்தடத்தில்19 நிமிடத்துக்கு பதில் 15 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் தொடங்க உள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் மற்றும் பெங்களூர் - தமிழ்நாடு இடையே தினமும் பயணிக்கும் மக்கள் அதிகமாக பயனடைய உள்ளனர்.
பெங்களூருவில் மாதவரா முதல் சில்க் போர்ட் வரை பச்சை வழித்தடத்திலும், ஒயிட்பீல்டில் இருந்து சல்லகட்டா வரை ப்ளூ வழித்தடத்திலும், ஆர்.வி.ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரை மஞ்சள் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.

சமீபத்தில் இந்த மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி பெங்களூர் ஆர்வி ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரை மொத்தம் 19.1 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இது மஞ்சள் வழித்தடமாகும்.
இந்த வழித்தடத்தில்
முதலில் 3 மெட்ரோ ரெயில்களுடன் சேவை வழங்கப்பட்டு வந்தது. அப்போது 25 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 4-வது ரயில் சேவையை தொடங்கியது. இதனால் ரயில்கள் இயக்கும் இடைவெளி 19 நிமிடங்களாக குறைந்தது. இதற்கிடையே நாளை கூடுதலாக இன்னொரு மெட்ரோ ரயில் சேவையை தொடங்க உள்ளது.
நாளை நவம்பர் 1ம் தேதி. மொழி வாரி மாநிலமாக கர்நாடகா உருவான தினமாகும். இது கர்நாடகாவில் கர்நாடகா ராஜ்யோத்சவா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி மஞ்சள் வழித்தடத்தில் நாளை (சனிக்கிழமை, நவம்பர் 1) முதல் 5வது மெட்ரோ ரயில் சேவையை தொடங்க உள்ளதாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் (பிஎம்ஆர்சிஎல்) அறிவித்துள்ளது.
இதனால் இந்த வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் 19 நிமிடங்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதில் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயங்க உள்ளது. ்அதாவது காலை 8 மணி முதல் மதியம் வரையும், அதன்பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயங்கும். இது பயணிகள் மெட்ரோ ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தை குறைக்க உள்ளது. இந்த ஆர்வி ரோடு - பொம்மச்சந்திரா மெட்ரோ வழித்தடம் பெங்களூர் - ஓசூர் ரோட்டில் அமைந்துள்ளது.
இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கும், பெங்களூரில் இருந்து ஓசூருவுக்கும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். தற்போது அவர்கள் இந்த மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசல் இன்றி இருமார்க்கமாக ஆர்வி ரோடு - பொம்மசந்திரா இடையே பயணித்து வருகின்றனர். இப்போது கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்குவது என்பது அந்த மக்களுக்கு பெரிய வரமாக பார்க்கப்படுகிறது.
இந்த மெட்ரோ ரயில் ஆர்வி ரோடு, ராகி குட்டா இன்டர்சேஞ்ச், ஜெயதேவா ஹாஸ்பிட்டல், பிடிஎம் லேஅவுட் இன்டர்சேஞ்ச், சென்ட்ரல் சில்க் போர்டு, பொம்மனஹள்ளி இன்டர்சேஞ்ச், ஹொங்கசந்திரா, கூட்லு கேட், சிங்கசந்திரா, ஹொசரோடு, பீரதின அக்ரஹாரா, எலக்ட்ரானிக் சிட்டி, இன்போசிஸ் பவுன்டேஷன் (கோனப்பன அக்ரஹாரா), ஹூஸ்கூர் ரோடு, பயோகான் ஹெப்பகோடி, டெல்டா எலக்ட்ரானிக்ஸ் பொம்மசந்திரா என 16 ஸ்டேஷன்களை கொண்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் வாரத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 6.30 மணிக்கு பதிலாக 30 நிமிடங்கள் முன்கூட்டியே 6 மணிக்கு மெட்ரோ ரயில் தனது சேவையை தொடங்கும். அதேவேளையில் ஞாயிற்றுக்கிழமை என்றால் முதல் மெட்ரோ ரயில் காலை 7 மணி முதல் இயங்கும். கடைசி மெட்ரோ ரயில் பொம்மசந்திரா ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.42 மணிக்கு புறப்படும். அதேவேளையில் ஆர்வி ரோட்டில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் ஆர்வி ரோடு - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கும்போது தினமும் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பயணிகள் பயணிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் அந்த எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தினமும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை பயணித்து வருகின்றனர். தற்போது கூடுதல் ரயில் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications