மாஸ்..பெங்களூர் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்-தமிழ்நாட்டின் 4 திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஜூலை 17,18-ந் தேதி நடைபெறும் பாஜகவுக்கு எதிரான ஆலோசனை கூட்டத்தில் மொத்தம் 24 எதிர்க்கட்சிகள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் மும்முரமாக உள்ளன. இதன் ஒரு பகுதியாக பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் 23-ந் தேதி 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக பொது வேட்பாளர்களை மாநிலங்களில் நிறுத்துவது, பொது செயல் திட்டம் உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேசம் சிம்லாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கு கனமழை கொட்டி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. இதனையடுத்து காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஜூலை 17,18-ல் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடத்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மேற்கொண்டு வருகிறார். இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
பாட்னா கூட்டத்தில் மொத்தம் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற நிலையில் பெங்களூர் ஆலோசனை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தம் 24 எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாட்னா கூட்டத்துக்குப் பின்னர் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. இதனால் பெங்களூர் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
பெங்களூரு ஆலோசனை கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கொங்கு தேசிய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆர்.எஸ்.பி, பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ் (ஜோசப்), கேரளா காங்கிரஸ் ( மணி) ஆகியவை புதியதாக பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications