ஸ்கூட்டியில் பெண்ணை பார்த்ததும்.. 27 வயது இளைஞர் செய்த செயல்.. அடச்சீ பெங்களூரில் ஷாக்
பெங்களூர் சுங்கதகட்டேவில் உள்ள சீனிவாச சர்க்கிளில் கடந்த 2ம் தேதி பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து கணவர் காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் நடுவே பள்ளம் இருந்தது. இதனால் அந்த பெண் ஸ்கூட்டரின் வேகத்தை குறைத்து பள்ளத்தை விட்டு விலகி செல்ல முயன்றார்.
இந்த சமயத்தில் தான் திடுக்கிட வைக்கும் சம்பவம் நடந்தது.

ஸ்கூட்டரின் வேகத்தை பெண் குறைந்தபோது அவர் அருகே ஓடிச்சென்ற இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். தொடக்கூடாத இடத்தை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு சென்றார். இதனால் அந்த பெண் பதறிப்போனார். உடனடியாக பின்னால் காரில் வந்த தனது கணவரிடம் கூறினார்.
கணவர் அந்த இளைஞரை, விரட்டி சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து 112 என்ற அவசர உதவி பெண் மூலமாக பெண் போலீசை தொடர்பு கொண்டார். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஒய்சாலா காரில் வந்தனர். அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இளைஞரின் உருவம் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் பெயர் வினோத் (வயது 27) என்பதும், அவர் ஹீரோஹள்ளியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
வினோத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் இதுபோன்று தனியாக வாகனங்களில் செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. சாலையில் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் டூவீலரில் மெதுவாக செல்லும் பெண்களை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.
இதற்காக அவர் நம்பர் பிளேட் இல்லாத டூவீலரை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. வினோத் மீது காமாட்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications