பெங்களூரில் 3வது நாளாக கொட்டி தீர்க்கும் மழை.. பேரிடர் மையம் தந்த திடீர் வார்னிங்.. மக்களே கவனம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் 3வது நாளாக இன்று பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வேலையை முடித்து வீடு திரும்பும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவும் மழை பெய்ய சான்ஸ் உள்ளதாக கர்நாடகா மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வார்னிங் செய்துள்ளது.

பெங்களூரில் கோடை வெயிலுக்கு நடுவே மே 2ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியிருந்தது. அதன்படி பெங்களூரில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

in-bengaluru-gets-modrate-rain-in-a-row-of-3rd-day-and-ksndmc-gives-alert-for-people

நேற்று முன்தினம் மாலையில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மொத்தம் 11 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர். அதன்பிறகு நேற்றும் நகரின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. காலையில் வெயில், மாலையில் மழை என்று வானிலை மாறி மாறி பெங்களூரில் தொடர்கிறது.

பெங்களூரில் மீண்டும் மழை

இதன் தொடர்ச்சியாக இன்றும் பெங்களூரில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. பெங்களூர் பசவனகுடி, பனசங்கரி, ஜேபி நகர், பிடிஎம் லேஅவுட்,, இந்திரா நகர், பட்டாபிராம் நகர், எச்ஏஎல் 2வது ஸ்டேஜ், கிரிநகர், அவலஹள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் ராஜாஜி நகர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் லேசாக மழை பெய்தது.

பேரிடர் மையம் தந்த வார்னிங்

பெங்களூர் நகரை பொறுத்தவரை இன்று இரவு வரை மழை பெய்ய சான்ஸ் உள்ளதாக கர்நாடகா மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், '' பெங்களூர் நகரில் இன்று மாலை/ இரவில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இடி மின்னலுடன், சூறைக்காற்றுடன் இந்த மழை பெய்பயலாம். மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது'' என கணித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் நகரின் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.

நாளை 'மஞ்சள் அலர்ட்' வார்னிங்

மேலும் பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை கனமழைக்கான 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்படும்போது கனமழைக்கும், இடி மின்னலுக்கும் வாய்ப்பு இருக்கும். மேலும் 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்படும்போது 24 மணிநேரத்தில் குறைந்தபட்சமாக 64.5 மில்லி மீட்டர் (6 செமீ) முதல் அதிகபட்சமாக 115 மில்லி மீட்டர் (11.5 செமீ) வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கும்.

நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டது. அப்போது தான் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது. அதோடு 24 மணிநேரத்தில் 111 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் நாளைய தினமும் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+