இதெல்லாம் பெங்களூரில் மட்டும் தான் நடக்கும்.. மேனேஜர் நம்பர் கேட்டு அலப்பறை கூட்டிய வீட்டு ஓனர்!
பெங்களூரில் வீடு தேடுவது நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது, இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நகரமான பெங்களூரில் வருடம் 365 நாளும் வாடகை வீடுகளுக்கான டிமாண்ட் இருந்து வருகிறது. இதனாலேயே வீட்டு ஓனர்கள் கடுமையான கட்டுப்பாடுகள், அதிகப்படியான வாடகை என வீடு தேடுவோருக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோஜெக் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் தனது வீட்டு தேடும் அனுபவத்தை Grapevine என்ற தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பெங்களூர் மக்களை தாண்டி நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

1BHK வீட்டுக்கு இவ்வளவு சேட்டையா?
கோஜெக் நிறுவனத்தை சேர்ந்த இந்த ஐடி ஊழியர் பெங்களூரில் வாடகை வீடு தேடி அலைந்துள்ளார். அப்போது ஒரு "ஈரப்பதம் கொண்ட, சுவரில் தண்ணீர் ஊறிய 1BHK" வீட்டை பார்த்துள்ளார். ஆனால் இந்த வீட்டு உரிமையாளர் நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஆவணங்களை கேட்டது தனது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
1 BHK வீட்டு உரிமையாளர், அந்த ஐடி ஊழியரிடம் ஆறு மாத வங்கி அறிக்கைகள், அலுவலகத்தில் தனக்கு மேல் இருக்கும் ரிப்போர்டிங் மேனேஜர் போன் நம்பர், மற்றும் நிறுவன HR துறையிடமிருந்து அதிகாரப்பூர்வ கேரக்டர் சான்றிதழ் ஆகியவற்றை கேட்டுள்ளார்.
இந்த ஆவணங்கள் சாதாரண வாடகை வீட்டு ஒப்பந்தத்திற்கான சரிபார்ப்பை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடும் அளவுக்கு சென்றுவிட்டதாக அந்த இளைஞர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் தனது பதவில் " நான் வீடு வாடகைக்கு கேட்கிறேன், குழந்தை தத்தெடுக்க விண்ணப்பிக்கவில்லை" என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பெங்களூரில் வீட்டு ஓனர்கள் வாடகைக்கு வரும் நபர்களிடம் லின்கிடுஇன் ப்ரொபைல் கேட்பது தற்போது வழக்கமாக மாறிவிட்டது. இதுவே அதிகம் என மக்கள் புலம்பி வரும் நிலையில் 6 மாத பே ஸ்லிப், மேனேஜர் நம்பர், ஹெச்ஆர் லெட்டர் எல்லாம் ரொம்ப அநியாயமாக உள்ளது.

பெங்களூரில் அதிகப்படியான வாடகை
இந்த சம்பவம் முதல் முறையல்ல, பலமுறை இதுபோன்று நடந்துள்ளது. பெங்களூரில் அதிக வருமானம் கொண்ட ஐடி தொழில் வல்லுநர்கள் அதிக எண்ணிக்கையில் வரும் நிலையில், அவர்களுக்கு நல்ல ஏரியாவில், நல்ல வீடுகள் கிடைப்பது மிகவும் குறைவு. இதனால் இயல்பாகவே வீட்டு வாடகை அதிகரிக்கிறது.
இதை தாண்டி பெங்களூரில் வாடகைக்கு வரும் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை வீட்டு உரிமையாளர்களுக்கு அளிக்கும் காரணத்தால் பலர் இத்தகையை கடுமையான கட்டுப்பாடுகள், Background check ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இதனால் வீட்டு உரிமையாளர்கள் நிலைமையை தங்கள் கைகளில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வழக்கத்துக்கு மாறான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இன்னும் சில இடங்களில் சூரிய ஒளி வரும், கூடுதலாக பால்கனி இருக்கிறது போன்ற காரணத்துக்காக கூடுதல் பணம் கேட்பது, வருடத்திற்கான வாடகையை டெபாசிட்டாக கேட்பது என பல விஷயங்கள் பெங்களூரில் நடக்கிறது.
வீட்டு உரிமையாளர்களின் நியாயம்
வீட்டு உரிமையாளர்கள் தரப்பில் பார்த்தால், இந்திய வாடகை சட்டங்கள் வாடகைக்காரருக்கு சாதகமாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, வாடகை செலுத்தாதவரை அல்லது பிரச்சினைக்குரியவரை வெளியேற்றுவது மிகவும் கடினம். எனவே, வீட்டை வாடகைக்கு அளிப்பதற்கு முன்பே அனைத்து விதமான ஆபத்துகளையும் தவிர்க்க அவர்கள் முயற்சி செய்கின்றனர். இதனால் தான் அளவுக்கு அதிகமான சோதனைகள் நடைபெறுகின்றன என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இளம் தலைமுறையினருக்கு சவால்
இந்த நிலை இளம் தலைமுறையினருக்குபெரும் நெகுக்கடியை ஏற்படுத்துகிறது. நல்ல வருமானம் இருந்தாலும், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தனியுரிமை பறிக்கப்படுவதாக அவர்கள் உணர்கின்றனர். இதுவே கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக இருந்தால் பெற்றோர் நம்பர் முதல் கல்லூரி முதல்வர் வரையில் நம்பர்களையும், விபரங்களையும் சேகரிக்கும் வழக்கம் வீட்டு உரிமையாளர்களிடம் உள்ளது.
-
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications