கொரோனாவில் இருந்து மீண்ட 27 வயது பெண்ணுக்கு மீண்டும் தொற்று.. பெங்களூருவில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் முதல்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நபருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் கொரோனா தாக்கும் என்று சீனாவில் முன்பு செய்திகள் வெளியாகின. இதேபோல் தென்கொரியாவில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நபருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் இருப்பது பெங்களூருவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 27 வயது இளம் பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பபட்டது. நோய் அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமலேயே முற்றிலும் குணமடைந்தார்.. இந்நிலையில் எந்த விதமான நோய் அறிகுறியும் இல்லாமல் அவருக்கு மீண்டும் இப்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் பாதிப்பு

மீண்டும் பாதிப்பு

இதன் மூலம் குறிப்பிட்ட பெண்ணுக்கு கொரோனாவிற்கு எதிராக எந்தவிதமான நோய் எதிர்ப்பு சக்தியும் அவரது உடலில் உருவாக்கவில்லை என்பதைக் காட்டுவதாக ஃபோர்டிஸ் மருத்துவமனையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பெங்களுருவில் தொற்று பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா வந்திருப்பது இதுவே முதல்முறை என டாக்டர் பிரதீக் பாட்டீல் கூறினார்,

 ஏன் இப்படி பாதிப்பு

ஏன் இப்படி பாதிப்பு

ஒரு மாத காலத்திற்குள் அந்த பெண் இரண்டாவது முறையாக இந்த நோயால் எப்படி பாதிக்கப்பட்டார் என்பது குறித்து டாக்டர் பிரதீக் பாட்டீல் விளக்கம் அளித்தார். அவர் கூறும் போது. "பொதுவாக, கொரோனா தொற்று ஏற்பட்டால், 2-3 வாரங்களினல் உடல்லி நோய் எதிர்ப்பு திறன் உருவாகும்.

ஆன்டிபாடிகள் மறைந்தது

ஆன்டிபாடிகள் மறைந்தது

ஆனால் குறிப்பிட்ட பெண் நோயாளியின் உடலில் ஆன்டிபாடி உருவாகவிலலை.வந்துள்ளது, அதாவது, முதல் தொற்றுநோய்க்குப் பிறகு அந்த பெண்ணின் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவில்லை. ஒரு மாதத்திற்குள் ஆன்டிபாடிகள் அவரது உடலில் இருந்து மறைந்துவிட்டன, இதனால் மீண்டும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார். ஆனால் இப்போது அறிகுறிகள் லேசானவை/

நீண்ட காலம் நீடிக்காது

நீண்ட காலம் நீடிக்காது

மீண்டும் கொரோனா பாதிப்பு என்பது குறிப்பிட்ட நபரிடமிருந்தும் ஆன்டிபாடிகள் இல்லாமல் போகலாம். எனினும் தொற்று வளர்ந்தாலும் அவை நீண்ட காலம் நீடிக்காது, எனவே வைரஸ் உடலுக்குள் நுழைந்து மீண்டும் நோயை ஏற்படுத்தும்" இவ்வாறு அவர் கூறினார்.

 41 லட்சம் பாதிப்பு

41 லட்சம் பாதிப்பு

ஆசியாவில் கொரோனாவால் மிக மோசமான பாதிப்புக்குள்ளான இந்தியாவில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த கண்டுபிடிப்பு COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது மற்றும் முடிவுக்குக் கொண்டுவருவது என்பது கவலை தரும் கேள்வியாக உள்ளது. கிட்டத்தட்ட 90,000 தினசரி கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதனால் தொற்று பாதிப்பு 41 லட்சத்தை தாண்டியுள்ளது.

விஞ்ஞானிகள் பதில்

விஞ்ஞானிகள் பதில்

தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்டு மீண்ட நபருக்க மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு உருவாவதன் காரணமாக தடுப்பூசி பலன் அளிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும், இந்திய விஞ்ஞானிகள் மறுமுறை கொரோனா பாதிப்பு என்பது அரிதானவை என்று கூறியுள்ளனர். கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இருக்காது என்ற அச்சத்தை மறு கொரோனா பாதிப்பு ஏற்படுத்தி இருந்தாலும், இதை உறுதி செய்ய நீண்ட ஆய்வு தேவை என்று விஞ்ஞானிகள் கூறினர்.

மீண்டும் கொரோனா பாதிப்பு

மீண்டும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிங்களிலும் மற்றும் உலக நாடுகளில் ஹாங்காங், அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் மீண்டும் கொரோனா தொற்று நோய்கள் பதிவாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+