டெலிவரி பாயை கார் ஏற்றி கொன்ற மாஸ்டர் ஜோடி! பெங்களூரை அதிரவைத்த சிசிடிவி வீடியோ.. முக்கிய ஆதாரம்
பெங்களூர்: பெங்களூரில் காரும், ஸ்கூட்டரும் மோதியது. இதில் கார் சைட் கண்ணாடி சேதமானது. இதனால் காரில் பயணித்த மாஸ்டர் ஜோடி, ஸ்கூட்டரை பின்தொடர்ந்து சென்று மோதியது. இதில் ஸ்கூட்டரில் பயணித்த டெலிவரி பாய் இறந்தார். தற்போது அதுதொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
பெங்களூர் கெம்பட்டாலி பகுதியை சேர்ந்தவர் தர்ஷன் (வயது 24). இவர் டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறார். கடந்த 25ம் தேதி இரவில் தர்ஷன் உணவு டெலிவரி செய்ய தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

தர்ஷன் ஸ்கூட்டர் ஓட்டினார். பின், இருக்கையில் நண்பர் வருண் என்பவர் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். புட்டேனஹள்ளி அருகே நடராஜா லே-அவுட்டில் அவர்கள் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு காரும், அவரது ஸ்கூட்டரும் மோதிக்கொண்டன. இதில் காரின் சைட் கண்ணாடி சேதமடைந்தது.
இதையடுத்து தர்ஷன் மன்னிப்பு கேட்டுவிட்டு உணவு டெலிவரி செய்ய ஸ்கூட்டரில் புறப்பட்டார். ஆனால் காரில் இருந்த ஜோடி கடும் கோபமடைந்தனர். உடனடியாக அவர்கள் தர்ஷனை பின்தொடர்ந்து சென்று அவரது ஸ்கூட்டரில் காரை வைத்து மோதினர்.
இதில் ஸ்கூட்டரில் பயணித்த தர்ஷன் மற்றும் வருண் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தர்ஷனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமநை்திருந்த வருணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஜேபி நகர் போக்குவரத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஸ்கூட்டர் மீது கார் மோதிய இடத்துக்கு சென்று கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, ஸ்கூட்டரை பின்தொடர்ந்து வேகமாக வந்து கார் மோதியது பதிவாகி இருந்தது. அந்த கார் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
🚨 Bengaluru KA, D*adly Road Rage!
— Deadly Kalesh (@Deadlykalesh) October 29, 2025
A Kalaripayattu trainer & his wife allegedly rammed their car into a delivery agent’s bike near JP Nagar, after its handle grazed their mirror.
The biker d!ed on the spot, while the pillion rider survived. pic.twitter.com/Y0lNFtr2Iq
அதன்படி தர்ஷனை கார் ஏற்றி கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த மனோஜ் குமார் (வயது 32), அவரது மனைவி ஆர்த்தி சர்மா (30) என்பது தெரியவந்தது. இதில் மனோஜ் குமார் களரிப்பட்டு பாரம்பரிய கலையின் பயிற்சியாளராக உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் 2 பேருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தர்ஷனின் ஸ்கூட்டரும், அவர்களின் காரும் மோதியதில் காரின் கண்ணாடி சேதமடைந்ததால் மனோஜ் குமார் காரை ஏற்றியது தெரியவந்தது.
இதுபற்றி மூத்த விசாரணை அதிகாரி, ‛‛கார் - ஸ்கூட்டர் மோதியபோது மனோஜ் குமார் கடும் கோபமடைந்தார். இதனால் அவர் தனது காரை திருப்பி, ஸ்கூட்டரை பின்தொடர்ந்து சென்று ஸ்கூட்டரில் மோதி உள்ளார். வீடியோவை பார்க்கும்போது இது விபத்து போன்று தெரியவில்லை. வேண்டும் என்றே மோதி உள்ளார். . இதில் டெலிவரி பாய் இறந்துள்ளார்'' என்று கூறியுள்ளார். இதையடுத்து தம்பதி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தம்பதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வுருகிறது.
மேலும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது இன்னொரு தகவலும் வெளியானது. அதாவது ஸ்கூட்டர் மீது காரை ஏற்றி தர்ஷனை கொன்ற தம்பதி மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். மாஸ்க் அணிந்து வந்தவர்கள் அந்த இடத்தில் நொறுங்கி கிடந்த காரின் பாகங்களை சேகரித்து சென்றுள்ளனர். இதுவும் இந்த வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. அங்கு நடந்தது விபத்து இல்லை. வேண்டும் என்றே இடித்து கொன்றுள்ளதற்கு தம்பதியின் இந்த செயல் வலு சேர்க்கும் வகையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications