பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன்
பெங்களூர்: பெங்களூரு நகரில் இப்போது ஒரு அதிர வைக்கும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்குள்ள 40 லட்சம் பேர் ஒரு ரகசிய செயல்பாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.. அந்த ரகசியத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. அது என்ன தெரியுமா?
இந்தியாவில் திருமணமானவர்கள் பயன்படுத்தும் டேட்டிங் செயலிகளின் வளர்ச்சி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. குறிப்பாக "க்ளீடன்" போன்ற செயலிகளை இந்தியாவில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது..

க்ளீடன் ஆப் - ரகசிய உறவு
இந்த க்ளீடன் ஆக் என்றால் என்ன தெரியுமா? கல்யாணம் ஆனவர்கள் தங்களுக்கு வெளியே ரகசியமாக புதிய நண்பர்களையோ அல்லது துணைகளையோ தேடிக்கொள்ள இந்தச செயலி பயன்படுகிறதாம்.. அதாவது கள்ளக்காதல், டேட்டிங் செய்ய நினைப்பவர்கள், இந்த ஆப்பை பயன்படுத்துவார்கள்... ஆனால், பயனர்களின் விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும்..
இந்த ஆப்பை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கைதான் ஆண்டுக்கு ஆண்டு மிக வேகமாக அதிகரித்து வருகிறதாம்.. அந்தவகையில், இப்போது ஒரு புள்ளி விவரம் வெளியாகி உள்ளது..
கள்ளக்காதல் ரகசிய உறவு
இந்த லிஸ்ட்டில் இந்தியாவின் எந்த நகரம் முதலிடம் பிடித்துள்ளது என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.. பொதுவாக மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்கள் தான் முன்னிலையில் இருக்கும் என்று பலரும் நினைத்தார்கள்.. ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப நகரமான பெங்களூரு இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது..
பெங்களூருவில் வசிக்கும் ஐடி ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த கலாச்சாரம் அதிகம் பரவி இருப்பது தெரியவந்துள்ளது.. பெங்களூருவை தொடர்ந்து மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.. தென்னிந்தியாவில் சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களிலும் இந்த செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது..
பெங்களூரு டாப் சிட்டி
மக்கள் ஏன் இது போன்ற ஆப்களை தேடிச் செல்கிறார்கள் என்பதற்கு சமூக ஆர்வலர்கள் சில முக்கிய காரணங்களை கூறுகிறார்கள்.. இன்றைய அவசர உலகில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே போதிய நேரம் செலவிட முடியாமல் போவது ஒரு முக்கிய காரணமாக உள்ளது..
வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக பலரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.. குறிப்பாக 34 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இந்த செயலியை அதிகம் பயன்படுத்துகிறார்களாம்.. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக ஆர்வம் காட்டி வருவது ஒரு புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது..
சீக்ரெட் தகவல்கள்
முன்பெல்லாம் இது போன்ற விஷயங்களை வெளிப்படையாக பேச தயங்கிய மக்கள் இப்போது டிஜிட்டல் தளங்கள் மூலம் ரகசியமாக தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்..
பயனர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதால் எவ்வித பயமுமின்றி மக்கள் இதில் இணைகிறார்கள்.. கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.. திருமணத்திற்கு புறம்பான உறவு என்பது குற்றமல்ல என்று நீதிமன்றம் கூறிய பிறகு இதுபோன்ற செயலிகளின் வளர்ச்சி இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது..
பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் மக்கள் சந்திக்கும் தனிமை மற்றும் நவீன வாழ்க்கை முறை மாற்றங்களே இதற்கு அடிப்படையாக உள்ளது..
மாறி வரும் வாழ்க்கை சூழல்
இப்போது 40 லட்சம் என்று இருக்கும் இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் இன்னும் பல மடங்கு உயர வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.. இது இந்திய குடும்ப அமைப்பில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது..
திருமண உறவில் ஏற்படும் சலிப்பை போக்க இது போன்ற தவறான வழிகளை தேடுவது சமூக ரீதியாக பல சிக்கல்களை உருவாக்கும்.. உறவுகளில் நேர்மை குறைந்தால் அது ஒட்டுமொத்த குடும்ப நிம்மதியையும் பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..!!!
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications