Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1ம் வகுப்புக்கு ரூ.7 லட்சம்.. 11ம் வகுப்புக்கு ரூ.11 லட்சம்.. அதிர வைத்த பெங்களூர் பள்ளி கட்டணம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடப்பு கல்வியாண்டில் பெங்களூரில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான கட்டணம் ரூ.7 லட்சமாகவும், 11ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான கட்டணம் ரூ.11 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது ஏழை பெற்றோர் முதல் பணக்கார பெற்றோர் வரை அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எப்படியாவது தங்களின் மகன், மகள்கள் படித்து கைநிறைய சம்பாதிக்கும் பணிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு பெற்றோரும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

bengaluru-school-fees-rs-1-lakh-for-class-1-and-rs-11-lakh-for-class-11-shocking-everyone
.

மேலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பொருளாதார சூழலுக்கு ஏற்ப அந்தந்த பகுதியில் சிறந்த பள்ளி என பெயர் எடுத்து இருக்கும் பள்ளியில் படிக்க வைக்கின்றனர். அரசு பள்ளிகளில் கட்டணம் என்பது கிடையாது. ஆனால் தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பள்ளியில் உள்ள வசதிகளை பொறுத்து பள்ளி கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதிர வைத்த ‛ஸ்கூல் ஃபீஸ்’

சில இடங்களில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகப்படியாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இப்படியான சூழலில் தான் பெங்களூரில் உள்ள பள்ளி ஒன்றின் ஆண்டு கட்டணம் குறித்த விவரம் இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதில் 1ம் வகுப்புக்ககான கட்டணம் ரூ.7.35 லட்சம் என்றும், அட்மிஷனுக்கு தனியாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா என்ற பெயர் கொண்ட நபர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று மாலை 6.54 மணிக்கு பதிவு ஒன்றை செய்துள்ளார்.

1ம் வகுப்புக்கு எவ்வளவு?

அதில், ‛‛பெங்களூரில் சிறந்த பள்ளி ஒன்றில் தொடக்க கல்விக்கான ஆண்டு கட்டணம் இதுதான். 1ம் வகுப்புக்கு ஆண்டுக்கு ரூ.7.35 லட்சம் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி ரூ.1 லட்சம் அட்மிஷன் கட்டணமாக செலுத்த வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில் கல்வி கட்டணத்துக்கான பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛ 2025-26ம் ஆண்டுக்கான ஆண்டு கட்டண விவரங்கள் இதுதான். விண்ணப்ப படிவத்துக்கான கட்டணம் ரூ.1000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அட்மிஷன் கட்டணம் (ஒருமுறை செலுத்தக்கூடியது மற்றும் மீண்டும் திருப்பி தரப்படாத கட்டணம்) ரூ.1 லட்சமாக உள்ளது.

10, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு எவ்வளவு?

அதேபோல் 1 முதல் 5ம் வகுப்புக்கு ஆண்டு கல்வி கட்டணமாக ரூ.7.35 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை 2 Term ஆக பிரித்து கட்டலாம். அதன்படி ஒரு Term-க்கு ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும். 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரூ.7 லட்சத்து 75 ஆயிரமாக உள்ளது.

9 மற்றும் 10ம் வகுப்புக்கான கட்டணம் ரூ.8.50 லட்சமாக உள்ளது. ஐசிஎஸ்இ (ICSE) 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான கட்டணம் ரூ.5.94 லட்சமாக உள்ளது. ஐபிடிபி (IBDP) 11ம் வகுப்பு மற்றும் பிளஸ் 12 மாணவர்களுக்கான கட்டணம் ரூ.11 லட்சமாக உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+