பெங்களூருவுக்கு வார்னிங்.. மார்ச் 1ம் தேதியே தொடங்கும் கோடைக்காலம்! வெயில் வதைக்கப்போகுது
பெங்களூர்: பெங்களூரில் மார்ச் 1ம் தேதி முதல் கோடைக்காலம் தொடங்குகிறது. மார்ச் 1ம் தேதியிலேயே கோடைகாலம் தொடங்கும். மார்ச் மாதத்தில் 35 - 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் வார்னிங் செய்துள்ளது.
பெங்களூரில் தற்போது படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பெங்களூரில் அதிகபட்சமாக 32.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது வழக்கத்தை விட 1 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

எச்ஏஎல் விமான நிலையத்தில் 32.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது வழக்கத்தை விட 0.8 சதவீதம் அதிகமாகும். அதேபோல் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 32.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது வழக்கத்தை விட 1.4 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
இந்நிலையில் தான் கோடைக்காலம் முன்கூட்டியே மார்ச் 1ம் தேதி பெங்களூரில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த ஆய்வாளர் சிஎஸ் பட்டீல் கூறியுள்ளதாவது:
''பெங்களூர் நகரில் தற்போது படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்த முறை மார்ச் 1ம் தேதியிலேயே கோடைகாலம் தொடங்கும். மார்ச் மாதத்தில் 35 - 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம்.
பெங்களூரை எடுத்து கொண்டால் கோடைக்காலத்தில் அதிகபட்சமாக கடந்த 2016 ஏப்ரல் மாதம் 39.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகி இருந்தது. அதற்கு முன்பாக என்றால் கடந்த 1931 ம் ஆண்டு மே மாதம் 38.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது'' என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications