ஹாய் பொண்டாட்டி.. அமெரிக்க மாப்ளைக்கு ஆசைப்பட்டு ரூ.2.3 கோடியை இழந்த பெங்களூரு டீச்சர்.. இது தேவையா
பெங்களூரு: நாளுக்கு நாள் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன.. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் அதிகரிக்க அதிகரிக்க, அவைகளை வைத்தே பணம் பறிக்கும் மோசடி சம்பவங்களும் பெருகி வருகின்றன. புதுபுது வகையில் ஆன்லைன் மோசடிகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.. அதிலும் மேட்ரிமோனியல் மூலம் நடக்கும் திருமண மோசடிகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.. இதுபோன்ற மோசடிகளுக்கு ஆண், பெண் இரு தரப்புமே விலக்கில்லை.. கர்நாடகாவில் ஒரு கொடுமை இப்போது நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த விதவை பெண்ணுக்கு 59 வயதாகிறது.. இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்..

பெங்களூரு ஆசிரியை
கடந்த 2019ம் ஆண்டு, மேட்ரிமோனி ஒன்றில் இந்த ஆசிரியை பதிவு செய்துள்ளார். அப்போது ஆஹான் குமார் என்ற நபர் டீச்சருக்கு அறிமுகமாகியிருக்கிறார்.. அமெரிக்காவில் என்ஜினியராக வேலை பார்ப்பதாக சொல்லி, டீச்சரிடம் நட்பாகியிருக்கிறார்..
ஒருகட்டத்தில் டீச்சரை செய்துகொள்வதாகவும் கூறியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, அப்போது முதல் டீச்சரை, "மனைவி" என்றே கூப்பிட்டு வந்துள்ளார்.
இதனால் டீச்சரும், ஆஹான் குமாரை முழுமையாக நம்பியிருக்கிறார்.. இந்த நம்பிக்கையை ஆஹான் குமார் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்.
சாப்பாட்டு செலவு, மெடிக்கல் செலவு, டிராபிக்கில் அபராதம், போன்ற பல்வேறு காரணங்களை அடிக்கடி சொல்லி டீச்சரிடம் பணம் வாங்க துவங்கினார்.. அத்தனை போலியான காரணங்களையும், நம்பிய டீச்சர், கடந்த 5 வருடங்களில் மொத்தம் 2.3 கோடி ரூபாயை ஆஹான் குமாருக்கு அனுப்பியிருக்கிறாராம்.
வங்கி கணக்கு - டீச்சர்
இந்த 5 வருடமாக அந்த பணத்தை ஆஹான் குமார் தரவுமில்லை.. டீச்சரை கல்யாணமும் செய்து கொள்ளவில்லை.. எனினும், கடந்த நவம்பர் மாதமும், டீச்சரிடம் ஆஹான் குமார் பணம் கேட்டுள்ளார்.. ஆனால், பணம் கொடுக்க டீச்சர் மறுத்துள்ளார்... உடனே டீச்சரிடம் பேசுவதை நிறுத்தி கொண்டாராம் ஆஹான் குமார். செல்போன் முதல்கொண்டு, டீச்சருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளார்.
அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று ஆசிரியை உணர்ந்துள்ளார்.. உடனே இதுகுறித்து கடந்த 3ம் தேதி உள்ளூர் ஸ்டேஷனிலேயே புகார் அளித்தார்.
டீச்சர் தந்த புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆஹான் குமாரின், வங்கி கணக்குகளை முடக்கிவிட்டது.. மேலும், அவரை தேடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சூளைமேடு நர்ஸ் ஏமாந்த கதை
இப்படித்தான், கடந்த வாரம் சென்னை சூளைமேட்டிலும் ஒரு பெண் ஏமாந்தார்.. 24 வயது இளம்பெண், தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். திருமணத்துக்கு மேட்ரிமோனியலில் பதிவு செய்திருந்த நிலையில், சூர்யா என்ற இளைஞர் நர்ஸுக்கு போன் செய்து பேசி, நேரில் சந்திக்க வேண்டும் என்றாராம்.
அதன்படியே நர்ஸும் சூர்யாவை சந்திக்க சென்றபோது, ஒரு கிஃப்ட்டை தந்து, எடுத்த எடுப்பிலேயே ஆச்சர்யப்படுத்திவிட்டாராம் சூர்யா..
பிறகு உன்னை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று ஆசை வார்த்தை கூறிய சூர்யா, நாம் கல்யாணத்துக்கு பிறகு சொந்த வீட்டில்தான் வாழணும்.. என்னிடம் 40 லட்சம் ரூபாய் இருக்கு.. மிச்சம் 10 லட்சம் இருந்தால் வீட்டை வாங்கிடலாம் என்றாராம்.
தங்க நகைகள், பணம்
உடனே நர்ஸும், வங்கியில் லோன் போட்டு ரூ.8.7 லட்சம் பணத்தை சூர்யாவிடம் தந்துள்ளார். அதற்கு பிறகு சூர்யாவை காணவில்லை. இதுதொடர்பாக நர்ஸ் அண்ணாநகர் மகளிர் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் சூர்யாவை கைது செய்து விசாரித்தனர். அப்போதுதான், நர்ஸ் போலவே மேலும் 50 பெண்களிடம் இப்படி நகை, பணத்தை பெற்று திருமண மோசடியை சூர்யா செய்து வந்தது அம்பலமானது.
சூர்யாவின் காரில் SPCL Secretary International Human Rights & Crime Control Council என்ற பெயரில் சிகப்பு நிற போர்டு பொருத்தி வைத்துள்ளார்.. இந்த போர்டு வைத்தால், பெண்கள் தன்னை எளிதாக நம்பி விடுவார்கள் என்றும் கணக்கு போட்டுள்ளார்.. சூர்யாவின் அப்பா மத்திய உளவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராம். இப்போது சூர்யா ஜெயிலில் உள்ளார்..
அமெரிக்க மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு
இதுபோன்ற திருமண இணையதள மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும், அதிலும், வெளிநாட்டில் வசிப்பதாகக் ஆசைவார்த்தை பேசி மோசடி செய்யும் கும்பலிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
அமெரிக்க மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு 2.3 கோடியை பெங்களூரு டீச்சர் இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
பெங்களூரு ஆசிரியை மேட்ரிமோனியல் மூலம் பழகிய அமெரிக்க நபரிடம் 2.3 கோடி ரூபாயை இழந்தார், திருமண மோசடி குறித்து போலீசார் விசாரணை, பொதுமக்கள் ஆன்லைன் திருமண மோசடிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாளுக்கு நாள் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன.. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் அதிகரிக்க அதிகரிக்க, அவைகளை வைத்தே பணம் பறிக்கும் மோசடி சம்பவங்களும் பெருகி வருகின்றன. புதுபுது வகையில் ஆன்லைன் மோசடிகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.. அதிலும் மேட்ரிமோனியல் மூலம் நடக்கும் திருமண மோசடிகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.. இதுபோன்ற மோசடிகளுக்கு ஆண், பெண் இரு தரப்புமே விலக்கில்லை..
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications