நானும் என் பொண்டாட்டியும் சிவப்பு... புள்ளை மட்டும் கறுப்பா - சந்தேக கணவனின் மண்டையை உடைத்த மனைவி
கணவன் சந்தேகப்பட்டால் தீக்குளிப்பது ராமாயண காலம். சந்தேகப்படும் கணவனை தூக்கி தீயில் போடுவது இந்தக்காலம். பெங்களூருவில் ஒரு பெண் தன்னை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்த கணவனை கிரிக்கெட் பேட்டினால் அடித்த
பெங்களூரு: என்னோட பிள்ளை வேற மாதிரி இருக்கானே என்று சந்தேகப்பட்டு காதலித்து கரம் பிடித்த மனைவியை சிசிடிவி கேமராவை வைத்து டிடெக்டிவ் மூலம் கண்காணித்திருக்கிறார் ஒரு கணவர். இதைக் கண்டுபிடித்த மனைவி, கிரிக்கெட் பேட்டை எடுத்து கணவனின் மண்டையை பிளந்திருக்கிறாள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஜெயநகரில் அழகான இளம் பெண்ணைப் பார்த்த உடன் காதல் வயப்பட்ட அந்த நபர் தனது காதலை அந்த பெண்ணிடம் கூறினான். ஆனால் அந்த காதலை அந்தப்பெண் ஏற்கவில்லை. மூன்று வருடங்கள் தொடர்ந்து விரட்டி விரட்டி காதலித்து அந்த பெண்ணின் மனதை கரைத்தான். ஒருவழியாக சம்மதிக்கவே, பெங்களூரு வீதிகளில் சுற்றித்திரிந்த காதல் ஜோடி ஒருவழியாக 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
காதல் வாழ்க்கையின் சாட்சியாக இந்த தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். அங்கேதான் வெடித்தது பூகம்பம். நானும் சிவப்பு... என் பொண்டாட்டியும் சிவப்பு... புள்ளை மட்டும் கறுப்பா இருக்கானே எப்படி ஜனகராஜ் பாணியில் யோசித்து மண்டையை குழப்பிக்கொண்டான் அந்த சந்தேக கணவன்.

கண்காணித்த கணவன்
மனைவி மீது நாளுக்கு நாள் சந்தேகம் கூடிக்கொண்டே போனது. எங்கே போனாலும் கண்காணித்தான் டிடெக்டிவ் ஏஜென்சியிடம் சொல்லி பல இடங்களில் ரகசியமாக 22 கேமராக்களை வைத்தான் அதனை தனது மொபைல் போன் மூலம் கண்காணித்தான் அந்த சந்தேக புத்தி கணவன். இனி அவ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று கூறி தனக்குத்தானே சிரித்துக்கொண்டான் அவன்.

அதிகரித்த சந்தேகம்
ஆபிசிற்கு போனாலும் வீட்டில் மனைவி என்ன செய்கிறாளோ? யாருடன் பேசுகிறாளோ? வீட்டிற்கு யாராவது வருகிறார்களோ என்ற சந்தேகத்துடனேயே இருந்தான். அவ்வப்போது சிசிடிவி காட்சிகளையும் பார்த்தான். கணவன் இல்லாத நேரத்தில் ஒருநாள் வீட்டிற்கு மனைவியின் அத்தை பையன் வந்து பேசிவிட்டு போனதை கண்டு பிடித்த அவனுக்கு சந்தேகம் அதிகரித்தது.

மனைவியிடம் கேட்ட கணவன்
நான் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்தது யார் என்று மனைவியிடம் கணவன் கேட்கவே, அந்த பெண்ணிற்கு சுருக்கென்றது. நாம சொல்லாம நம்ம வீட்டுக்கு அத்தை பையன் வந்தது எப்படி தெரியும் என்று யோசிக்கவே, கணவர் தன்னை கண்காணிப்பது தெரியவந்தது. கணவனிடம் சண்டை போடவே அடிதடி ரகளையாக மாறியது.

கிரிக்கெட் பேட்டில் அடி
மனைவியின் ஆத்திரம் எல்லை மீறியது. வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து கணவன் மண்டையில் அடிக்க ரத்தம் கொட்டியது. அசராத அந்த பெண், பெண்களுக்கான அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு பேசி அவர்களை வரவழைத்தார். கணவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த உதவி மைய அமைப்பினர். அந்த பெண்ணிற்கு மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைத்தனர். சந்தேகப்பட்ட கணவனின் மண்டையை மனைவி பிளந்த சம்பவம் பெங்களூரு ஜெயநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications