பெங்களூருவுக்கு ‛பேட் நியூஸ்’.. 3 நாட்கள் காவிரி நீர் சப்ளை கிடையாது.. மக்களுக்கு முக்கிய அட்வைஸ்
பெங்களூர்: பெங்களூர் நகர் முழுவதும் வரும் 15ம் தேதி முதல் வரும் 17 ம் தேதி வரை 3 நாட்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் கிடையாது என்று பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி குடிநீர் வழங்கும் பம்பிங் ஸ்டேஷன்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் தண்ணீர் சப்ளை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் நகருக்கு காவிரி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெங்களூரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி குழாய்கள் மூலமாக காவிரி தண்ணீர் கொண்டு வந்து சப்ளை செய்ப்பட்டு வருகிறது.

மேலும் ஆண்டுதோறும் பெங்களூரில் அதிகரிக்கும் மக்கள்தொகையால் காவிரி நீரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி குடிநீர் திட்டம் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பெங்களூருவுக்கு காவிரி குடிநீரை கொண்டு வரும் பம்பிங் ஸ்டேஷன் I, II, III மற்றும் IV ஆகிய நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
பெங்களூருவுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் இந்த பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி செப்டம்பர் 16ம் தேதி காலை 6 மணி முதல் 17 ம் தேதி காலை 6 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறுகையில், ‛‛இந்த பணிகள் மிகவுமு் முக்கியம். குடிநீர் விநியோகம் சீராக இருக்க இந்த பணி அவசியம்'' என்றார். இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே தண்ணீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூர் நகரை எடுத்து கொண்டால் காவிரி குடிநீர் 90 அடி தூரத்தில் உள்ள கேஆர்எஸ் அணையில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த அணையில் இருந்து தண்ணீரை் மேல்நோக்கி பம்ப் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ரூ.3 கோடி அளவுக்கு மின்சாரம் செலவிடப்படுகிறது. இது நகரத்தின் மொத்த தேவையில் 50 சதவீதமாகும்.
தற்போது, காவிரி நீர் வழங்கல் திட்டத்தின் நான்கு ஸ்டேஜ்களின் வழியாக ஒரு நாளைக்கு சுமார் 1,460 மில்லியன் லிட்டர் (MLD) தண்ணீர் வழங்கப்படுகிறது. காவிரி ஸ்டேஜ் V-ஐ செயல்படுத்துவதன் மூலம் கூடுதலாக நகருக்கு 750 எம்எல்டி தண்ணீர் கிடைக்கும். அதேவேளையில் மின்கட்டணமும் அதிகரிக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications