பள்ளி கூட முடிக்கல.. காதலுக்காக பெற்ற தாயை.. பெங்களூரில் ஷாக் சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காதலுக்காக பள்ளி மாணவி, தன்னுடைய காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்துள்ள சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவம் பெங்களூரின் சுப்ரமண்யபுரா பகுதியில் நடந்திருக்கிறது.

இப்பகுதியில் நேத்ராவதி எனும் பெண் வசித்து வந்திருக்கிறார். கணவரை பிரிந்து வாழும் இவர் தனது மகளை மிகுந்த சிரமத்திற்கு நடுவில் வளர்த்து வந்தார். தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் மகளுக்கு அக்கஷ்டம் தெரியக்கூடாது என்று பார்த்து பார்த்து வளர்த்தார். ஆனால், மாணவியோ எப்போதும் தாயை திட்டிக்கொண்டே இருந்திருக்கிறார். இப்படி இருக்கையில்தான் இதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

Bengaluru police crime

வீட்டிற்கு அடிக்கடி இந்த சிறுவன் வந்து செல்வது குறித்து தாய் சந்தேகப்பட்டிருக்கிறார். சந்தேகப்பட்டதை போல சிறுவன் தனது மகளை காதலிப்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால் சிறுவன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவன். எனவே ஒழுங்காக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று மாணவியின் தாய் நேத்ராவதி கூறியிருக்கிறார். மட்டுமல்லாது இனி தன் வீட்டு பக்கம் வரக்கூடாது என்றும் கண்டித்துள்ளார்.

இப்படி இருக்கையில் கடந்த அக்.25ம் தேதி அன்று நேத்ராவதி தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். அதேபோல மாணவியையும் காணவில்லை. தாய் சடலமாகவும், மகள் காணாமல் போனதும் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணை நடந்துக்கொண்டிருந்த நிலையில், 5 நாட்களுக்கு பின்னர் மாணவி வீடு திரும்பியிருந்தார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதாவது சிறுவன் கடந்த அக்.25ம் தேதி தனது நண்பர்களுடன் நேத்ராவதி வீட்டிற்கு மாணவியை பார்க்க சென்றிருக்கிறார். சிறுவனை மாணவிதான் வர சொல்லியிருக்கிறார். எனது தாய் மது போதையில் தூங்கிவிடுவாள் எனவே இரவு வீட்டிற்கு வர அழைத்திருக்கிறார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த சிறுவனையும் அவனது நண்பர்களையும் நேத்ராவதி பார்த்திருக்கிறார். சிறுவனை கண்டித்த அவர், சிறுவனின் செல்போனையும் பிடுங்கி வைத்துக்கொண்டு போலீசில் புகார் அளிப்பதாக கூறியிருக்கிறார்.

இதனால் செய்வது அறியாத சிறுவர்கள் நேத்ராவதியை கொன்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துக்கொண்டனர். இதனையடுத்து நேத்ராவதியின் கழுத்தில் துண்டை சுற்றி இருக்கியிருக்கின்றனர். சம்பவ இடத்திலேயே நேத்ராவதி உயிரிழக்க, இதை தற்கொலை போல செட்டப் செய்திருக்கிறார்கள். அதாவது நேத்ராவதியின் கழுத்தில் புடவையை சுற்றி அதை சீலிங் பேனில் மாட்டியிருக்கிறார்கள். பின்னர் அனைவரும் தப்பித்துவிட, சிறுமியை தங்களது நண்பர்கள் வீட்டில் பதுக்கியிருக்கிறார்கள்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது மாணவி நேரில் சரணடைந்திருப்பதால் வழக்கின் பின்னணி தெரிய வந்திருக்கிறது. தற்போது 13 வயது சிறுவன் உட்பட மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+