AI மான்ஸ்டர்.. வசமாக சிக்கிய பெங்களூர்! தீர்வு தெரியாமல் முழிக்கும் கர்நாடகா!
பெங்களூர்: பெங்களூர் என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ஐடி துறைதான். தற்போது, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையிலும் பெங்களூர் அசத்தி வருகிறது. ஆனால், அதுவே இந்த நகரத்திற்கு பெரிய பிரச்சனையாகவும் உருவெடுத்திருக்கிறது.
என்னதான் பெங்களூர் டெக் நகரமாக இருந்தாலும், அங்கு வசிக்கும் மக்கள் பல பிரச்சனைகளை தீவிரமாக எதிர்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக குடிநீர் பிரச்சனை. சரி அதுக்கும் ஏஐ-க்கும் என்ன சம்பந்தம் இருக்கு என கேட்கிறீர்களா? இருக்கு மக்களே!

பெங்களூரில் ஏஐ வளர்ச்சி
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெங்களூரில் காலி இடம் இருந்தால், அதை பிளாட்டாக மாற்றி வீடு கட்டி விற்று விடுவார்கள். ஆனால், இப்போதெல்லாம் காலி இடங்களை வீடு கட்ட விற்பதற்கு பதில், டேட்டா சென்டர்களுக்கு விற்பது அதிகரித்துள்ளது. வீடுகளுக்காக ரியல் எஸ்டேட் பிசினஸ் என்கிற நிலைமை மாறி, டெக் நிறுவனங்களுக்காக ரியல் எஸ்டேட் துறை வேலை செய்ய தொடங்கியுள்ளது. பெங்களூரில் டேட்டா சென்டர்களை அமைக்க ஒதுக்கப்படும் நிலப்பரப்பு என்பது ஆண்டுக்கு 20-25% வளர்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக ஒயிட்ஃபீல்டு மற்றும் தேவனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய டேட்டா சென்டர் பூங்காக்கள் உருவாகி வருகின்றன.
டேட்டா சென்டர்களின் வளர்ச்சி
பெங்களூரில் தற்போது டேட்டா சென்டர்களின் திறன் 100-120 MW ஆக இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது, 250-300 MW என்கிற நிலையை எட்டும். சாட்ஜிபிடி, ஜெமினி மாதிரியான ஏஐ தொழில்நுட்பம் இயங்க இந்த டேட்டா சென்டர்கள் அவசியம். மத்திய அரசின் தொழிநுட்ப சட்டவிதிகளின்படி, இந்தியர்களின் டேட்டாக்கள் இந்தியாவிலேயே சேமிக்கப்பட வேண்டும் என்பதால், ஏஐ நிறுவனங்கள் இந்தியாவில் டேட்டா சென்டர்களை அமைத்திருக்கின்றன. சரி எல்லாம் ஓகேதானே என்று நினைக்கலாம். ஆனால் இங்குதான் பிரச்சனை தொடங்குகிறது.
பிரச்சனை என்ன?
என்னதான் பெங்களூர், இந்தியாவின் டெக் நகரமாக இருந்தாலும், இங்கு குடிநீருக்கு இன்னமும் தட்டுப்பாடு இருக்கத்தான் செய்கிறது. கோடை காலங்களில், நீச்சல் குளங்கள், வாகனங்களை கழுவ தண்ணீரை பயன்படுத்த கூடாது என்று அரசு உத்தரவு போட்டு வருகிறது. இப்படி இருக்கையில், டேட்டா சென்டர்களுக்கு தேவைப்படும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
நீரின் தேவை
டேட்டா சென்டர்கள் செயல்பட அதிக அளவிலான மின்சாரம் ரொம்ப முக்கியம். இந்த அதிக மின்சாரம், டேட்டா சென்டர்களை சூடாக்கும். எனவே குளிர்விக்க தண்ணீர் முக்கியம். சாதாரணமாக 1 MW திறன் கொண்ட டேட்டா சென்டரை குளிர்விக்க ஒரு நாளைக்கு 50,000 - 1,00,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அப்படியெனில், 100-120 MW திறன் கொண்ட டேட்டா சென்டருக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? இந்த தண்ணீரை டேட்டா சென்டர்களுக்கு திருப்பி விட்டால்.. பெங்களூரின் நீர் தேவையை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? இப்படியாக பெங்களூர் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது.
ஏஐ மான்ஸ்டர்
அதேபோல ஒரு பெரிய டேட்டா சென்டருக்கு தேவைப்படும் மின்சாரத்தின் அளவு என்பது, மதுரை, திருச்சி போன்ற மொத்த நகரத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தின் அளவுக்கு சமமானதாகும். எனவே இதையெல்லாம் எப்படி அம்மாநில அரசு எதிர்கொள்ளப்போகிறது? என்பது கேள்வியாக இருக்கிறது. ஒரு பக்கம் ஏஐ தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைய வேண்டும். இன்னொரு பக்கம் குடிநீருக்கும், மின்சாரத்திற்கும் பற்றாக்குறை ஏற்படும். இதை பார்ப்பதா? அதை சாமாளிப்பதா? என்கிற இரண்டு பிரச்சனையில் பெங்களூர் சிக்கியிருக்கிறது.
இதைப்பற்றி பேசும் தொழில்நுட்ப வல்லுநர்கள், தற்போது பெங்களூர் ஏஐ மான்ஸ்டர் பிடியில் சிக்கியிருக்கிறது என்றும், தீர்வை அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications