பார்க்கிங் வசதி இல்லையா? ரோட்டில் காரை நிறுத்தினால் ரூ.25,000 அபராதம்! பெங்களூரில் புது ரூல்ஸ்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: டிராபிக் ஜாம் பிரச்சனைக்கு பெயர் பெற்ற சிட்டி பெங்களூர். நெரிசலை குறைக்க எவ்வளவோ முயற்சித்தும்.. ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை. எனவே, வீட்டில் பார்க்கிங் வசதி இல்லாமல் வீதியில் காரை நிறுத்தினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூர் பெருநகர மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.

'கிரேட்டர் பெங்களூர் அதாரிட்டி பார்க்கிங் ரூல்ஸ் 2026' என்கிற பெயரில் இந்த அபராதம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை அபராதம் வசூலிக்கப்படும்.

Bengaluru

பார்க்கிங் கட்டணம்

விதிமுறைகளின்படி, காரின் சைஸுக்கு ஏற்றார் போல ஃபைன் இருக்கும். குறைந்தபட்சம் ரூ.15,000 தொடங்கி அதிகபட்சம் ரூ.25,000 அபராதம் போடப்படும்.

  • சிறிய கார்களுக்கு - ரூ.15,000
  • செடான் கார்களுக்கு - ரூ.20,000
  • எஸ்.யு.வி. கார்களுக்கு - ரூ.25,000

ஓராண்டுக்கு ஃபைன்

கட்டிட விதிகளின்படி, தங்கள் வீட்டிற்குள் போதிய பார்க்கிங் வசதி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பார்கிங் பர்மிட் வழங்கப்படும். வீட்டிற்குள் பார்க்கிங் வசதி இல்லாமல் சாலைகளில் வாகனங்களை நிறுத்தினால் அது, சட்டவிரோத பார்க்கிங் என கருதப்பட்டு மேற்குறிப்பிட்ட அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தினால் ஓராண்டு வரை பார்க்கிங் செய்துக்கொள்ளலாம். பின்னர் அடுத்த ஆண்டு இதை புதுப்பிக்க வேண்டும்.

பைக்குகளுக்கும் அபராதம்

பெங்களூர் நகரத்தின் சாலைகள் A, B, C என 3 ஆக பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் A என வகைப்படுத்த சாலைகளில் ஒரு மணி நேரம் நிறுத்தினால் அதற்கு ரூ.80, B சாலை எனில் ரூ.60, C சாலை எனில் ரூ.40 என அபராதம் விதிக்கப்படும். இருச்சக்கர வாகனங்களுக்கும் அபராதம் உண்டு. A சாலை எனில் ரூ.40, B சாலை எனில் ரூ.30, C சாலை எனில் ரூ.20 ஒரு மணி நேரத்திற்கு அபராதமாக வசூலிக்கப்படும். இதில் இரவு 8 மணி தொடங்கி காலை 8 மணி வரை பார்க்கிங் கட்டணத்திற்கு 50% தள்ளுபடி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

பெங்களூர் மக்களின் வாழ்க்கை

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற திட்டம் அமல்படுத்தப்படுவதாக மாநகராட்சி தரப்பில் சொல்லப்பட்டாலும், டிராபிக் ஜாம் மெயின் ரோட்டில்தான் ஏற்படுகிறது.. தெருவுக்குள் ஏற்படுவதில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

மக்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. இந்தியாவில் அதிகமாக கார் வைத்திருக்கும் நகரம் பெங்களூர்தான். சொந்த பயன்பாட்டுக்காக 25 லட்சத்திற்கும் அதிகமான கார்களும், டாக்சி உள்ளிட்ட பயன்பாட்டுக்காக 3 லட்சம் என மொத்தம் 28 லட்சத்திற்கும் அதிகமான கார்களும் பெங்களூரில் ஓடுகின்றன. கார்களுடன் பைக்குகள் ஆட்டோக்கள் என சேர்த்தால் சுமார் 1.28 கோடி வாகனங்கள் பெங்களூர் சாலையில் ஓடுகின்றன.

பெங்களூரின் சாலைகள்

ஆனால், இவ்வளவு வாகனங்களையும் தாங்கும் அளவுக்கு பெங்களூரின் சாலைகள் இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்றே பதில் வருகிறது. பெங்களூர் சாலைகளின் மொத்த நீளம் 14,000-15,000 கி.மீ மட்டும்தான். அப்படியெனில் ஒரு கி.மீ சாலையில் 5850-900 வாகனங்கள் இருக்கின்றன. எனவே பெங்களூரில் வாகனங்களின் சராசரி வேகம் 11-15 கி.மீ தான்.

சாலையை விரிவாக்காமல் இருப்பது, அனைத்து பகுதிகளுக்கும் அரசு பேருந்து இயக்கப்படாதது, மெட்ரோ சேவைகள் விரிவுப்படுத்தப்படாதது போன்றவைதான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம். இதை சரி செய்யாமல், வெறுமென பார்க்கிங் கட்டணம் மட்டும் வசூலிப்பது என்பது ஃபெயிலியர் பிளான் என்று பலரும் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+