ஹய்யோ.. வேற வழியில்ல.. அந்த கடைசி 3 நாட்கள்.. புதுசா பிளானை போடும் பாஜக.. கூலாக கவனிக்கும் காங்கிரஸ்
பெங்களூரு: அநேகமாக இந்த முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லி வந்தநிலையில், காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் வெளிவந்திருந்தது பாஜகவை கலக்கமடைய செய்துள்ளது.. இதையடுத்து, முக்கிய வியூகத்தை மேலிட பாஜக வகுத்துள்ளதாகவும் தெரிகிறது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 2018ம் வருடம் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது.
ஆனால் ஒரே வருடத்தில் அந்த ஆட்சி கலைக்கப்பட்டு, பாஜக ஆட்சியைப் பிடித்தது.ஆட்சிக்கவிழ்ப்புக்கு பாஜகவே காரணம் என்று காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் குற்றம்சாட்டிய நிலையில், இந்த முறை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன..

லிஸ்ட்
கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி எண்ணப்பட உள்ளது. இந்த முறையும் காங்கிரஸ் கட்சி அங்கு தனித்து போட்டியிடுகிறது... எப்படியாவது இந்த முறை கர்நாடகத்தில் ஆட்சி அமைந்துவிட வேண்டும் என்பதிலும் முனைப்புகளை காட்டி வருகிறது.. அதனால்தான், தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கியது.. அந்தவகையில், ராகுல் காந்தி அடுத்த மாதம் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்...

பூரிப்பு ஹேப்பி
அதிலும், கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து பேசி சலசலப்பை ஏற்படுத்திய அதே கோலார் பகுதியில்தான், அடுத்த மாதம் 5ம் தேதி முதல் பிரச்சார கூட்டத்தை நடத்துகிறார்.. அதே மாநிலத்தில், அதே இடத்தில், இந்த முறையும் பிரச்சாரம் நடப்பதால், ராகுல் காந்தியின் பிரச்சாரம் இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரை மிகுந்த வெற்றியை பெற்றுவிட்டதாக காங்கிரஸ் தொண்டர்கள் பூரித்துள்ள நிலையில், ராகுலின் பிரச்சாரத்தை முறியடிக்க பாஜக களமிறங்கும் என்கிறார்கள்.

படுஸ்பீடு
ஆனால், பாஜகவோ படுஸ்பீடில் களத்தில் இறங்கிவிட்டது.. ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு ஒட்டுமொத்த வியூகங்களையும் கர்நாடகாவில் இறக்கி உள்ளது.. காரணம், தென் மாநிலங்களிலேயே, பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும்தான்... கடந்தமுறை தேர்தலின்போதே பாஜக நிறைய விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தது.. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத்ததாக புகார்கள் வெடித்து கிளம்பின.. அதனால்தான் இந்த முறை பாஜகவின் செயல்பாடுகள் பலராலும் உற்றுகவனிக்கப்பட்டு வருகிறது.

முஸ்லிம்கள்
ஏற்கனவே, அரசின் டெண்டர்களை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு 40 சதவிகித கமிஷன், முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்கள், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் என மக்களை பாதிக்கக்கூடிய பல பிரச்சனைகள் கர்நாடகாவில் உருவெடுத்து, பாஜகவுக்கு நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது.. அதற்கேற்றவாறு, கர்நாடகா டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பாஜக 107, காங்கிரஸ் 75, மதச்சார்பற்ற ஜனதா தளம் 36, மற்றவை 6 என வெற்றி பெறக் கூடும் என்று கூறப்பட்டிருந்தது...

8 முறை
அதேபோல, சிவோட்டர் கருத்து கணிப்புப்படி, கணிப்புகளில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் இப்போதைய பாஜக ஆட்சியை விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தது பாஜகவுக்கு கலக்கத்தை தந்துள்ளது.. அநேகமாக இந்த முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லி வந்தநிலையில், காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் வெளிவந்திருந்தது, பாஜகவை அதிர வைத்தது.. இத்தனைக்கும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, கர்நாடகத்திற்கு 8 முறை பிரதமர் மோடி வருகை தந்திருந்தார்..

பின்னடைவு
அப்போதுகூட, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், 80 முதல் 90 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால், பாஜகவின் வியூகத்தில் அதிரடிகள் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்த பாஜக முடிவு செய்திருக்கிறதாம்.. அதன் முதல்கட்டமாக, சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகிற 9-ந் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தர உள்ளார்... அதன்பிறகு, பிரதமர் மோடி பங்கேற்கும் 20 பேரணிகளை, மாநிலத்தில் 6 மண்டலங்களில் நடத்துவதற்கு பாஜக பிளான் செய்து வருவதாக தெரிகிறது..

வியூகங்கள்
குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் சொந்த ஊரான கலபுரகி, அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டு வருவதாக சொல்கிறார்கள். இதற்காக, கர்நாடக மாநிலத்தை ஹைதராபாத் கர்நாடகா, மும்பை கர்நாடகா, கடலோர கர்நாடகா என 6 மண்டலங்களாக பிரித்து புதிய தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளனர். இந்த 6 மண்டலங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்டம், பேரணி, ஊர்வலம் ஆகியவற்றை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளனர்... அடுத்த 30 நாட்களில் இந்த 6 மண்டலங்களிலும் 20 பொதுக் கூட்டங்களில் மோடி உரையாற்ற போகிறாராம்..

லாஸ்ட் அஸ்திரம்
அத்துடன் மே 6-ந் தேதியில் இருந்து பிரச்சாரம் முடியும் கடைசி நாளான 8-ந் தேதி வரை, தொடர்ந்து 3 நாட்கள் கர்நாடகத்திலேயே பிரதமர் மோடி முகாமிட்டு இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் தீவிர பிரச்சாரம் காரணமாக கூடுதலாக 15 முதல் 25 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. இன்னும் இதை பற்றின உறுதியான அறிவிப்பு வரவில்லையானாலும், பாஜக இன்னும் பல வியூகங்களை வகுத்து வருவதாகவும் தெரிகிறது.. இதற்கு காங்கிரசும் தயாராகி உள்ளதால், கர்நாடக தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications