போஸ்ட் ஆபிஸ் போன பில்கேட்ஸ்.. இப்படி ஒரு சேவையா.. வியந்து போய் பாராட்டி வெளியிட்ட பதிவு
பெங்களூரு: அண்மையில் பெங்களூரு வந்த பில்கேட்ஸ், தபால் துறையின் டிஜிட்டல் வங்கி சேவைகளை பார்த்து பாராட்டி உள்ளார். அத்துடன் பெங்களூரு தபால் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியுடன் எடுத்துக்கொண்ட படத்தையும் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அண்மையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பில்கேட்ஸ் இந்தியாவின் சிலிக்கான் வேலி எனப்படும் ஐடி நகரமான பெங்களூருவுக்கு வந்தார். பெங்களூருவில் உள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று டிஜிட்டல் பயன்பாடு குறித்து அறிந்தார்.

குறிப்பிட்ட தபால் அலுவலகத்தில் பணியாற்றும் குசுமா என்ற தபால் அதிகாரி டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வங்கி சேவைகளை வழங்குவதை நேரில் கண்டு வியந்து போய் பாராட்டி உள்ளார். அத்துடன் அந்த பெண் அதிகாரியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தபால்துறையின் டிஜிட்டல் வங்கி சேவைகளை பாராட்டி உள்ளார்.
இது குறித்து உலகப்பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், " இந்தியாவின் அஞ்சல்துறை சேவைகளை டிஜிட்டலில் வழங்கி வருகிறது. குறிப்பாக பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது, பண பரிமாற்றம் டிஜிட்டல் மூலம் மேற்கொண்டு வருகிறது.இந்த தபால் வங்கியின் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் 70 லட்சம் பேர் ஈடுபடுகிறார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் பொது கட்டமைப்புகளை உருவாக்குவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் உள்ள மக்களுக்கு பண பரிவர்த்தனை இல்லாத டிஜிட்டல் சேவைகள் உடனடியாக பாதுகாப்பாக கிடைத்து வருகிறது. இந்தியாவில் உள்ள எந்த பகுதியில் இருந்தும் இந்த டிஜிட்டல் சேவை வசதி கிடைக்கிறது. பொதுமக்கள் டிஜிட்டல் வங்கி சேவைகளை பயன்படுத்துவதால் அவர்களின் வேலை எந்த வகையிலும் பாதிக்கப்படுவது இல்லை.
இந்த நேரம் சேமிப்பு ஆவதால், அவர்கள் தங்களின் சேமிப்பை அதிகரித்து கொள்கிறார்கள். பெங்களூருவை சேர்ந்த தபால் கிளை அதிகாரி குசுமா டிஜிட்டல் வங்கி சேவை குறித்தும், அதில் தான் ஆற்றும் பெருமை மிகு பணி குறித்தும் என்னிடம் விளக்கி உள்ளார். இந்த வீடியோவை நான் பதிவேற்றம் செய்துள்ளேன்" இவ்வாறு பில்கேட்ஸ் தனது பதிவில் கூறியுள்ளார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications