பிரதமராக இருந்த யாரும் செய்யாததை செய்கிறார் மோடி.. காரணம் தோல்வி பயம்.. காங்கிரஸ் எம்.பி பேச்சு!
பெங்களூர் : "இந்திய வரலாற்றில் பிரதமராக இருந்த யாரும் எந்த தேர்தலிலும் வீதி வீதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தது கிடையாது. கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி அதிகமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளக் காரணம் பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது தான்." என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்.
கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் பிரமாண்ட ரோடு ஷோவில் பிரச்சாரம் செய்து வருகிறார். பிராதமர் மோடியின் இந்த ரோட்ஷோ 18 சட்டமன்ற தொகுதிகள் வழியாகச் செல்கிறது. கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவரும் நிலையில், பிரதமர் மோடி பிரச்சாரம் மூலம் ஆட்சிக்கு எதிரான அலையை முறியடித்துவிடலாம் என பாஜக நம்புகிறது.

இந்நிலையில், கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பியுமான திருநாவுக்கரசர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி, பாஜகவுக்காக வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்வதை காட்டமாக விமர்சித்துள்ளார்.
அப்போது பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, "கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி அதிகமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளக் காரணம் பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது தான். கர்நாடகாவில் பாஜக மீண்டும் வெற்றியடையாது, தோற்றுவிடும் என்ற பயம் வந்துவிட்டது. இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேரு உள்பட பிரதமராக இருந்த யாரும் எந்த தேர்தலிலும் வீதி வீதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தது கிடையாது.

பாஜக தோற்கப்போவது உறுதி என்பதால் பிரதமர் மோடி தெருத்தெருவாக அலைகிறார். அப்படி இருந்தும் கர்நாடகாவில் பாஜக தோல்வியுற்றால் அவர் பிரதமராக தொடரக்கூடாது. பிரதமர் மோடி இந்தத் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
பிரதமர் மோடி இலவசங்களுக்கு எதிராகப் பேசி வந்த நிலையில், தற்போது கர்நாடகா மாநில தேர்தலில் பாஜக தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை வாரி வழங்கி உள்ளது. இதுவே அவர்களது பலவீனத்தை காட்டுகிறது. பத்தாண்டு காலம் ஆட்சி செய்த பாஜக தற்போது இலவசங்களை அறிவித்துள்ளது. இது மக்களை திசை திருப்பும் ஏமாற்றும் செயல்." எனத் தெரிவித்தார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications